Accaddemy

பாகிஸ்­தானில் விளை­யா­ட தயாரான மே.இந்திய தீவுகள் அணி.. குண்டு வெடிப்பால் மறுப்பு. p



பாகிஸ்­தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தை அடுத்து, அந்
நாட்­டிற்கு வந்து கிரிக் கெட் விளை­யா­டு­வ­தற்கு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி மறுத்­து­விட்­ட­தாக பாகிஸ்தான் கிரிக் கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்­வா கக் குழுத் தலைவர் நஜம் சேத்தி கூறி­ய­தா­வது,

பாக். அணி, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் டெஸ்ட், ஒருநாள், இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் எதிர்­வரும் அக்­டோபர், -நவம்பர் மாதங்­களில் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் விளை­யாட உள்­ளது.

அந்தத் தொடரில், ஒரு நாள் போட்­டியின் சில ஆட்
டங்­களை பாகிஸ்­தானில் விளை­யா­டு­வ­தற்­காக மேற்கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம்.

அவர்களும் அதற்கு ஒப்­புக்­கொள்ளும் நிலையில் இருந்­தனர். அந்­நி­லையில், லாகூ ரில் கடந்த மார்ச் மாதம் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப
வம் நிகழ்ந்­தது.

 இதை ­ய­டுத்து, பாகிஸ்­தானில் பாது­காப்புச் சூழ்நிலை
இல்லை என்று கூறி அந் தத் திட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டனர் என்று
நஜம் சேத்தி கூறினார்.

பாகிஸ்­தானில் விளை­யா­ட தயாரான மே.இந்திய தீவுகள் அணி.. குண்டு வெடிப்பால் மறுப்பு. p பாகிஸ்­தானில் விளை­யா­ட தயாரான மே.இந்திய தீவுகள் அணி.. குண்டு வெடிப்பால் மறுப்பு. p Reviewed by Madawala News on 8/01/2016 10:09:00 AM Rating: 5