Free Space

இலங்கை மக்களது விருந்தோம்பல் உலகை கவர்ந்துள்ளதால் அடுத்த வருடத்திற்கான சர்வதேச வெசாக் தினம் இலங்கையில். ஜனாதிபதி. p



-ஜே.எம்.ஹபீஸ்-

இலங்கை மக்களது விருந்தோம்பும் பண்பு, பிறரை உபசரிக்கும் தன்மை என்பன வெகுவாகக் கவரப்பட்டதன் காரணமாக அடுத்த வருடத்திற்கான சர்வதேச வெசாக் தினத்தை இலங்கையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கையை சர்வதேச சமூகங்கள் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைந்திர்ப்பால சிரிசேனா தெரிவித்தார்.(18.8.2016)

கண'டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் எசல பெரஹரா இனிதே வெற்றிகரமாக முடிவுற்றதாக ஜனாதிபதியிடம் சம்பிரதாய பூர்வமாக மகஜர் கையளிக்கும் வைபவத்தின் பின் இடம் பெற்ற கூட்டத்திலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

எமது நாட்டில் வெசாக் காலங்களில் தன்சல என்றழைக்கப்படும் அன்ன சாலைகள் வீதி தோரும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகப் பொதுமக்களுக்கும் பக்கதர்களுக்கும் வழங்கப்படுவது வழக்கம். உலகில் எந்த நாட்டிலாவது இவ்வளவு பிரமாண்டமாக அன்னசாலை அமைத்து பாரிய அளவில் உணவுகள் வழங்கப்படுவதில்லை.

இது சர்வதேச மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மக்களின் உபசரிப்பு எத்'தகையது என்பதை அது உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியுள்ளன.

இவை இன்று நேற்று ஏற்படு;தத்ப்பட்ட ஒன்றல்ல. தொண்டு தொட்டு பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். எமது தேரவாத கொட்பாடுகளின் வழிகாட்டலாக அது அமைந்துள்ளது.

எனவே எமது தேரவாத போதனைகளை விரிவு படுத்த நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இன்று உலக நாடுகளில் பயங்கரவாதமும் அமைதி இன்மையும் ஏற்பட்டு வருகிறது. இதனால் உலக மக்கள் துயரங்களுக்கும் சங்கடங்களுக்கும் மத்தியில் வாழ்கின்றனர். ஆனால் தேரவாத தர்மத்தைப் பின்பற்றும் எமது நாடுகளில் அப்படியான அச்ச நிலைகள் இல்லை.


நாம் பின்பற்றும் கொள்கைகள் எமது கலாச்சாரம் என்பன ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாயந்தவையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொலன்னருவை, அனுராதபுரம், கண்டிய கலாசசாரங்கள் காணப்படுகின்றன. இவை பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியவைகளாகக் குறிப்பிடலாம்.

உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு ஆக்கிரமிப்புக்கள் நமது கலை,பொருளாதார,கலாச்சார பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு சவாலாக அமைந்த போதும் அவற்றை எல்லாம் பின்தள்ளி நாம் வெற்றி அடைந்துள்ளோம்.

வெசாக் காலங்களில் நாம் ஏற்படுத்தும் தன்சல கலாச்சாரம் வெளிநாட்வர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல்துறையினரும் ஆச்சரியப்படுகின்றனர். எமது மூதாதையர்கள் எமக்குத் தந்த ஒரு கலாச்சாமாக இது உள்ளது.

எனவே தேரவாத பௌத்த தர்மத்தை நாம் மேலோங்கச் செய்து வெற்றி பெற வழி சமைக்க வேண்டும் என்றார்.
இலங்கை மக்களது விருந்தோம்பல் உலகை கவர்ந்துள்ளதால் அடுத்த வருடத்திற்கான சர்வதேச வெசாக் தினம் இலங்கையில். ஜனாதிபதி. p இலங்கை மக்களது விருந்தோம்பல் உலகை கவர்ந்துள்ளதால் அடுத்த வருடத்திற்கான சர்வதேச வெசாக் தினம் இலங்கையில். ஜனாதிபதி. p Reviewed by Madawala News on 8/19/2016 06:53:00 PM Rating: 5