Oceas

இலங்கையில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்களை கோரும் பாகிஸ்தான். #pak



இலங்கையில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஷகில் ஹுஸைன் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் பாகிஸ்தான் தூதுவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்ததாக நிதியமைச்சு கூறியுள்ளது.

முதலீட்டுக்கு இலங்கை தற்போது தகுதியான நிலையில் காணப்படுவதாகவும், தமது நாட்டின் முதல்தர முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகள் செய்ய கூறுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போது காணப்படும் நேரடி விமான சேவையை மேலும் விஸ்தரித்தல் மற்றும் தேசிய விமான சேவையின் பங்களிப்பை இதற்காக பெற்றுக் கொள்வது சம்பந்தமாக ரவி கருணாநாயக்க பாகிஸ்தான் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்களை கோரும் பாகிஸ்தான். #pak இலங்கையில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்களை கோரும் பாகிஸ்தான். #pak Reviewed by Madawala News on 8/19/2016 04:12:00 PM Rating: 5