Accaddemy

உலகின் முதல் நிலை அணியாக பாகிஸ்தான் கிரிக்கட் அணி... வாழ்த்துக்கள். #pak



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்.

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது.

(மே.இ.தீவுகளுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 22 ஓவர்களே சாத்தியமானது 62/2 என்ற நிலையில் அப்படியே டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது)

மாறாக பாகிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 2014லிருந்து டெஸ்ட் தொடரை இழக்கவில்லை என்ற காரணத்தினால் இங்கிலாந்து தொடர் டிரா மூலம் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

அதற்கு முன்பாக டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்தில் இருந்தது பாகிஸ்தான்.

அதன் பிறகு இலங்கையை 2-1 என்றும், ஆஸ்திரேலியாவை 2-0 என்றும் பங்களாதேசை 1-0 என்றும் வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்துக்கு எதிராக 1-1 என்று யு.ஏ.இ.-யில் டிரா செய்தது பாகிஸ்தான்.

இதனை அடுத்து  உலகின் முதல் நிலை அணியாக பாகிஸ்தான் கிரிக்கட் அணி தரப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

உலகின் முதல் நிலை அணியாக பாகிஸ்தான் கிரிக்கட் அணி... வாழ்த்துக்கள். #pak உலகின் முதல் நிலை அணியாக பாகிஸ்தான் கிரிக்கட் அணி... வாழ்த்துக்கள். #pak Reviewed by Madawala News on 8/22/2016 08:44:00 PM Rating: 5