Accaddemy

மஹிந்த ராஜபக்ஷவை விசாரிக்க வேண்டும். #ranil



பாரா­ளு­மன்ற பொது நிதிக்­கு­ழு­விற்கு மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து விசா­ரித்தால் கடந்த ஆட்சிக் காலத்தில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கடன் தொகை எவ்­வ­ளவு என்­பதை தெரிந்­து­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

நாட்டை கடன் நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம் என்றும் பிர­தமர் வேண்­டுகோள் விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற பிர­த­ம­ரிடம் கேள்வி கேட்கும் நேரத்தின் போது, கடந்த ஆட்­சி­யா­ளர்கள் அரச கணக்­கு­களில் பதி­வு­களை மேற்­கொள்­ளாது பெற்­றுக்­கொண்ட கடன்கள் தொடர்பில் பிர­த­ம­ரிடம் ஐ.தே.கட்சி எம்.பி. நளின் பண்­டார எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்ட பதிலை வழங்­கினார்.

பிர­தமர் தனது பதிலில் தொடர்ந்து தெளி­வு­ப­டுத்­து­தலில், கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன்­போது பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ச்சி கண்­ட­கடன் நெருக்­க­டியில் தள்­ளி­வி­டப்­பட்ட நாட்­டையே பொறுப்­பேற்போம். பெற்ற கட­னையும் வட்­டி­யையும் செலுத்த கடன் வாங்கும் நிலை இருந்தது.

ஆனால் கடந்த வர­வு—­செ­லவு திட்­டத்தை முன்­வைக்கும் வரை­யிலும் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் வாங்­கிய கடன் தொகை எவ்­வ­ளவு என்­பதை எம்மால் தெரிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இன்று 9500, பில்­லியன் கடன் என அறி­யப்­பட்ட போதிலும், அது 10,000 பில்­லி­யன்­க­ளாக உய­ரலாம்.

எனவே, கடந்த ஆட்­சி­யா­ளர்கள் வாங்­கிய கடன் தொகையின் உண்மை நிலை என்ன என்­பது தொடர் பில் விசா­ரிப்­ப­தற்கு மூவர் அடங்­கிய குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நடை­பெ­று­கி­றது. அதன் அறிக்கை கிடைத்­ததும் அதனை வெளி­யி­டுவோம்.

அரச கணக்­கு­களின் பதி­வு­களை ஏற்­ப­டுத்­தாது மக்­க­ளையும் சர்­வ­தேச நாணய நிதியம் உலக வங்­கி­யையும் ஏமாற்­றவே பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

எனவே சுமந்­திரன் எம்.பி. தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற பொது நிதிக்­கு­ழு­விற்கு மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து விசா­ரிக்க முடியும்.

அவ்­வாறு அழைத்து விசா­ரித்தால் உண்­மைகள் வெளி­வரும். நாடு இன்று கடன் சுமையில் பொரு­ளா­தார சிக்­கலில் சிக்கிக் கொண்­டுள்­ளது. அத்தோடு பூகோள ரீதி­யா­கவும் பொருளாதார நெருக்கடி தலை தூக்கியுள்ளது. எனவே இவற்றிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். அனைத்தையும் வெற்றி கொள்ள வேண்டும்.

இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிகொள்வோம் என்று பிரதமர் தெரி வித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை விசாரிக்க வேண்டும். #ranil மஹிந்த ராஜபக்ஷவை விசாரிக்க வேண்டும். #ranil Reviewed by Madawala News on 8/12/2016 10:11:00 AM Rating: 5