Free Space

முஹம்­மது ரபீக் சுட்டுக்கொலை செய்யபட்ட வழக்கு.. சந்தேக நபர் சலீம் விடு­தலை செய்யபட்டார். #releasd



ஏறா­வூரைச் சேர்ந்த முஹம்­மது ரபீக் என்­ப­வரை 2006 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி ஏறாவூர் பிர­தேச செய­லக கட்­ட­டத்தில் வைத்து துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொலை செய்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் தொட­ரப்­பட்ட வழக்கில் சந்­தேக நப­ரான சுலைமான் லெவ்வை சலீம் என்­ப­வரை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றம் விடு­தலை செய்து தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

இந்த வழக்கு மட்டு. மேல் நீதி­மன்ற நீதி­பதி விஸ்­வ­லிங்கம் சந்­தி­ர­மணி முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தது. எதி­ரியின் தரப்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பேரின்பம் பிறேம்நாத் ஆஜ­ரானார்.

இந்தக் கொலை வழக்கில் நூர்­மொ­ஹமட் அன்வர், முஹ­மது பைநூஸ், முஹ­மது ஜலால்டீன், சலாம் றியால், முஹ­மது நளீம், முஹ­மது சமீம், ஏறாவூர் மாவட்ட வைத்­தி­ய­சாலை டாக்டர் ஏ.எஸ்.சி.எம்.பளீல், பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­சீவ பெரேரா, பிர­தம பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­சேன ரத்நா­யக்க, பொலிஸ் சார்ஜன்ட் அல்பட் ஆகியோர் அரச தரப்பில் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

குறித்த நபரே சுட்டார் என்­பதை அரச தரப்­பினர் நியா­ய­மான சந்­தே­கத்­துக்கு அப்பால் எண்­பிக்­க­வில்லை. மேலும் இச்­சம்­பவம் இரவு 7.00 மணிக்கு நடை­பெற்­றுள்­ளது. அப்­போது கட்­ட­டத்தில் மின்­சாரம் இருக்­க­வில்லை.

முக­மூடி அணிந்த நபரை கண்­ட­தாக சாட்­சியம் அளிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அவர் யார் என்று தெரி­யாது என்று சாட்­சிகள் கூறி­யுள்­ளனர்.

அத்­துடன் சந்­தேக நபர் அந்த இடத்தில் நின்­றதைக் கண்­ட­தாக சாட்­சிகள் தெரி­வித்த போதிலும் அவர் சுட்­டதைக் காண­வில்லை என்று பதி­ல­ளித்­துள்­ளனர்.
சமீம் என்ற சாட்­சி­யினால் பொலி­ஸா­ருக்கு அளிக்­கப்­பட்ட சாட்­சி­யத்­துக்கும் நீதி­மன்­றத்தில் அளித்த சாட்­சி­யத்­துக்கும் இடையில் பாரிய முரண்­பாடு காணப்­ப­டு­கி­றது. இந்த விட­யங்கள் எதி­ரியின் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிறேம்­நாத்­தினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன.

சகல விட­யங்­க­ளையும் கவ­னத்தில் எடுத்த மேல் நீதி­மன்ற நீதிபதி வி.சந்திரமணி குற்றச்சாட்டை அரசதரப்பினர் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் எண்பிக்கத் தவறியதால் எதிரியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

முஹம்­மது ரபீக் சுட்டுக்கொலை செய்யபட்ட வழக்கு.. சந்தேக நபர் சலீம் விடு­தலை செய்யபட்டார். #releasd முஹம்­மது ரபீக் சுட்டுக்கொலை செய்யபட்ட வழக்கு.. சந்தேக நபர் சலீம் விடு­தலை செய்யபட்டார். #releasd Reviewed by Madawala News on 8/08/2016 11:59:00 AM Rating: 5