Free Space

இன்று வெளியான பத்திரிகை செய்திக்கு, மறுப்பும் எச்சரிக்கையும் விடுத்தார் அமைச்சர் ரவூப் ஹகீம்.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரே அரசியல் கட்சிதான் என்றும், அதில் அணியணியாகப் பிரிந்து ஆதரவுக்குழுக்களை அமைக்க வேண்டிய அவசியம் அறவே இல்லையென்றும், அவ்வாறு பிளவுபடுத்த எவராவது எத்தனித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரித்தார்.

வெள்ளிக்கிழமை (26) வெளியான பத்திரிகையொன்றில் 'ஹக்கீம் - பஷீர் முரண்பாடுகளைக் களைய நடுநிலைக்குழு' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தியொன்றை சுட்டிக்காட்டியே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தாம் பிரஸ்தாபச் செய்தியையிட்டு விசனமடைந்துள்ளதாகவும், இந்தச் செய்தி கட்சியை கூறுபோட்டுத் துண்டாட எத்தனிக்கும் சதிகாரர்களுக்குத் துணைபோவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனித்தனி ஆதரவுக் குழுக்கள் அல்லது நடுநிலைக் குழுக்கள் என்பவற்றின் தேவைப்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை இல்லையென்றும், அப்படியான குழுக்களை தாமாகவே அமைத்துக் கொண்டு எவரும் கட்சியின் தலைமையை அணுக முடியாதென்றும் அவர் கடும் தொனியில் கூறினார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர்.

இன்று வெளியான பத்திரிகை செய்திக்கு, மறுப்பும் எச்சரிக்கையும் விடுத்தார் அமைச்சர் ரவூப் ஹகீம். இன்று வெளியான பத்திரிகை செய்திக்கு, மறுப்பும் எச்சரிக்கையும் விடுத்தார் அமைச்சர் ரவூப் ஹகீம். Reviewed by Madawala News on 8/26/2016 01:21:00 PM Rating: 5