Free Space

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் சாக்ஷி மாலிக். #RioOlympic



ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 70 இடத்தில் உள்ளது.
120 கோடி இந்தியர்களின் ஏக்கத்தைப் போக்கியுள்ளார் சாக்ஷி மாலிக்.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை "பிரீ ஸ்டைல்" பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய இந்தியாவின் சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக் பெற்ற வெண்கலப் பதக்கம், இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கவனம் முழுவதையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் சாக்‌ஷி மாலிக். முந்தைய ஆண்டுகளைவிட அதிக வீரர்களுடன் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்றுள்ளது.

 ஆனால், போட்டிகள் தொடங்கி பத்து தினங்களுக்கு மேலாகியும், பதக்கப் பட்டியலில் நுழைய முடியாமல் இந்தியா திணறி வந்தது. இந்நிலையில் சாக்‌ஷியின் இந்த வெற்றி மூலம் முதல் பதக்கத்தைப் பெற்று பதக்கப் பட்டியலில் நுழைந்துள்ளது இந்தியா.

மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக். 23 வயதான சாக்‌ஷி, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் சாக்ஷி மாலிக். #RioOlympic இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் சாக்ஷி மாலிக். #RioOlympic Reviewed by Madawala News on 8/18/2016 09:32:00 AM Rating: 5