Free Space

நிவாரணங்கள் சரியாக கிடைக்காவிட்டால் அரசிற்கு எதிர்ப்பு காட்டுவோம். s



சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்புடன் பிரதேச செயலக காரியாலயத்தில் நடைபெற இருந்த கூட்டம் நடைபெறவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

குறித்த கூட்டம் நேற்று (19) இடம்பெற இருந்ததாக பிரதேசவாசி ஒருவர் கூறினார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈட்டுத் தொகை சரியான முறையில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கும் நிவாரணங்கள் சரியாக கிடைக்காவிட்டால் அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போவதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

சீதாவக்க பிரதேச செயலாளருடன் நேற்று இடம்பெற்ற மற்றொரு கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இவ்வாறு கூறினர்.

நிவாரணங்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் அடிப்படை நிவாரண பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சீதாவக்க பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ். பண்டார, பாதிக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் கண்டு தவறற்ற முறையில் நட்ட ஈடு வழங்குவதற்கு கால அவகாசம் தேவை என்று கூறினார்.
நிவாரணங்கள் சரியாக கிடைக்காவிட்டால் அரசிற்கு எதிர்ப்பு காட்டுவோம். s  நிவாரணங்கள் சரியாக கிடைக்காவிட்டால் அரசிற்கு எதிர்ப்பு காட்டுவோம். s Reviewed by Madawala News on 8/20/2016 11:46:00 AM Rating: 5