(வீடியோ இணைப்பு) இறக்காமம் S.L. உஸ்மான் அகீலுக்கு ‘இளம் இயக்குநர்’ விருது.



இறக்காமத்தைச் சேர்ந்த இளம் கலைஞர் எஸ்.எல். உஸ்மான் அகீல் 'இளம் இயக்குநர்' விருது பெற்றுள்ளார். இவ்விருதை சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வழங்கி கௌரவித்தது.

கடந்த ரமழான் மாதம் வெளிநாட்டுப் பாடகர் மாஹிர் ஸெய்னுடைய ரமழான் பாடலை வைத்து இலங்கை நாட்டுச் சூழலுக்கேற்ப காட்சியமைத்து பாடலாக இயக்கி சென்ற ரமழான் மாதத்தின் துவக்க காலத்தில் சமூக வலைத் தளங்களில் இவர் பதிவேற்றினார். இப்பாடல் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்புகளைப் பெற்றதோடு 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டதுடன் 2000 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தேசிய தொலைக்காட்சி  நேத்ரா ரீவியின்; பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியிலும் இப்பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைக் கருத்திற் கொண்டு சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் '2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த இளம் இயக்குநர்” விருதினை அவ்வியக்கத்தின் தேசிய அங்கத்தவர் மாநாட்டில் வைத்து வழங்கி கௌரவித்தது. இதன்போது 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவ்விருதினையும் காசோலையையும் இந்தியாவின் பிரபல பேச்சாளர் Dr KVS. Habeeb Muhammed வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





(வீடியோ இணைப்பு) இறக்காமம் S.L. உஸ்மான் அகீலுக்கு ‘இளம் இயக்குநர்’ விருது. (வீடியோ இணைப்பு) இறக்காமம் S.L. உஸ்மான் அகீலுக்கு ‘இளம் இயக்குநர்’ விருது. Reviewed by Madawala News on 8/08/2016 11:12:00 PM Rating: 5