Accaddemy

வர­லாற்றுச் சாதனை படைத்­த இலங்கை அணிக்கு நாளை முதல் சவால் ஆரம்பம். @sl



இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள உலகின் முதல்­தர அணி­யான அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மூன்று டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதிய இலங்கை அணி 3-–0 என தொடரைக் கைப்­பற்றி வர­லாற்றுச் சாதனை படைத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் நாளை­ய­தினம் இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. இப்­போட்டி ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மாகி பக­லி­ர­வுப் ­போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே டெஸ்ட் தொடரில் தோல்­வி­யுற்ற அவுஸ்­தி­ரே­லியா அதன் அனு­ப­வங்­க­ளுடன் ஒரு நாள் தொடரில் சாதிப்­ப­தற்­கான முனைப்­புக்­களை செய்­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவுஸ்­தி­ரே­லிய அணித்­த­லைவர் ஸ்டீபன் ஸ்மித் தலை­மையில் சில மாற்­றங்­க­ளுடன் இப்­போட்­டியை அவ்­வணி எதிர்­கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை டெஸ்ட் தொடர் வெற்­றியால் புத்­து­ணர்ச்­சி­யுடன் எழுச்­சி­ய­டைந்­துள்ள இலங்கை அணி தனது தாய் மண்ணில் ஒரு நாள் தொடரை வெற்றி கொள்­வ­தற்­கான முனைப்­புக்­களை நிச்­சயம் மேற்­கொள்ளும்.

இறு­தி­யாக 2011ஆம் ஆண்டு இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருந்த அவுஸ்­தி­ரே­லியா ஐந்து ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொடரை 3–-2 எனக் கைப்­பற்­றி­யி­ருந்­தது. 1975ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போ­து­வ­ரையில் 91 ஒருநாள் போட்­டிகளில் இரு அணி­களும் மோதி­யுள்­ளன.

இதில் அவுஸ்­தி­ரே­லியா 56 போட்­டி­க­ளிலும் இலங்கை 31 போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றுள்­ள­தோடு 4 போட்­டிகள் கைவி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
வர­லாற்றுச் சாதனை படைத்­த இலங்கை அணிக்கு நாளை முதல் சவால் ஆரம்பம். @sl  வர­லாற்றுச் சாதனை படைத்­த இலங்கை அணிக்கு நாளை முதல் சவால் ஆரம்பம். @sl Reviewed by Madawala News on 8/20/2016 10:41:00 AM Rating: 5