Accaddemy

இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென்று தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா ? Sl

அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி

இலங்கையில் கடந்த ஏழு எட்டு வருடங்களாக இத்திஹாதுல் மதாரிஸ் என்று மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களை ஒன்று படுத்தி இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சையும் நடாத்தி அதில் சிறப்புச் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களும் வழங்குகின்ற ஒரு அமைப்பு உள்ளது அதில் கிட்டத்தட்ட 220 மத்ரஸாக்களுக்கும் மேல் அங்கத்துவம் வகிக்கின்றன.
இது ஒன்றே போதும்....
மேலதிக தகவல்களுக்கு..
.

இரண்டாவது - எந்த இயக்கமாக இருப்பினும் இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட  மத்ரஸாக்களுக் கென்று பொதுவான சில பாடத்திட்டங்கள் (எழுதப்படாத விதியாக) அனைத்து மத்ரஸாக்களிலும் உள்ளன. நீங்கள் அரபு படித்தவராக இருந்தால் அது இலகுவில் புரிந்து விடும்.

.
மூன்றாவது - இலங்கை அரபு மத்ரஸாக்கள் என்பது தனியார் நிறுவனங்களே, அவரவர் நினைத்ததை பாடத்திட்டங்களாக போட்டு படிப்பித்தாலும் யாரும்  கேள்வி கேட்க முடியாது, இவை அரசாங்க பாடசாலைகள் அல்ல எனினும் கூட
அன்று தொட்டு இன்றுவரை ஒரே
பாடத்திட்டத்தில் அனைத்து மத்ரஸாக்களும் நகருவது இதன் வெற்றியை நோக்கிய பயணமாகவே கருத முடிகிறது.
.

நான்காவது - இயக்கங்கள் , ஜமாதுக்கள் , மத்ஹப்கள் , என்று முஸ்லிம் சமூகம் (பிரிந்து என்று சொல்ல முடியாது) பெயர் வைத்துக் கொண்டாலும் யாரும் மத்ரஸாக்களில் வெளியான ஒருவரை மௌலவி , ஆலிம் இல்லையென்று எங்கும் கூறியது கிடையாது ஒருவர் தனது நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளவரைக் கூட அந்த மௌலவி இவ்வாறு கூறினார் என்றே ஆரம்பிப்பார் இதுவும் ஒரு சிறப்பம்சமே.
.

ஐந்தாவது - தப்ஸீர் , ஹதீஸ் , பிக்ஹ் ,
போன்ற விடயங்களில் ஒவ்வொரு அமைப்பும் தமக்கு விருப்பமான அறிஞர்களின் நூலை பாடத்திட்டமாக போடுவதனால் புத்தகம் வேறாயினும் கற்பிக்கும் கலைகளின் அடிப்படை அறிவு போதிக்கப்படுபவர்களுக்கு சென்றடைகிறது என்ற உண்மையை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
.

ஆசிரியர் ஆகிய பின் மௌலவியாகுவது அரிதோ அரிது
ஆனால் மௌலவியாகிய பின் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்களை எம்மால் காட்டமுடியும்,
இதிலிருந்து என்ன புரிகிறது....

இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென்று தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா ? Sl இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென்று தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா ? Sl Reviewed by Madawala News on 8/24/2016 05:16:00 PM Rating: 5