Ad Space Available here

மகிந்தவைவின் நிலையை நினைக்கும் போது எமக்கும் கவ­லை­யாக உள்­ளது. slfpஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை எவ்­வா­றா­வது ஒன்­றாக்கி பல­மான நிலையில் வைத்­தி­ருக்­க­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன முயற்­சிக்­கின்­ற நிலையில், கட்­சியை இரண்­டாக்­கவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ முயற்­சித்து வரு­கின்றார்.

கை நழு­விப்­போன அதி­கா­ரத்தை மீண்டும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற முயற்­சி­யி­லேயே தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் தெரி­வித்­தனர்.

தன்னை தோற்­க­டித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தற்­போ­தைய தலை­மைத்­து­வத்­தையும், தனக்கு எதி­ராக வாக்­க­ளித்த
மக்­க­ளையும் பழி­வாங்­க­வேண்டும் என்ற எண்ணம் மட்­டுமே அவ­ரிடம் உள்­ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பில் கலந்துகொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கருத்து தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அங்கம் வகிக்கும் இன்­னொரு குழு­வினர் கட்­சியை அவ­ம­திக்கும் வகை­யிலும், கட்­சிக்கு களங்கம் ஏற்­படும் வகை­யிலும் செயற்­ப­டு­வது கவ­லை­ய­ளிக்கும் செயற்­பா­டாகும். இந்த செயற்­பா­டுகள் கட்­சியை களங்­கப்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாது எம்மை ஆத­ரித்த மக்­க­ளையும் வேத­னைக்கு உட்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்த்தும் அவர்­களின் செயற்­பா­டு­களை எதிர்த்தும் பாத­யாத்­திரை முன்­னெ­டுப்­ப­தாக கூறிக்­கொண்டு வந்­த­வர்கள் இறு­தியில் எம்மை பழி­வாங்­கவும் எமது தலை­மைத்­து­வத்தை விமர்­சிக்­க­வுமே செயற்­பட்­டனர் என்­பது தெளி­வாக விளங்­கி­யுள்­ளது. உண்­மை­யி­லேயே பொது எதி­ர­ணி­யென தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­கொள்ளும் நபர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்­தவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை இரண்­டாக்­க­வுமே செயற்­ப­டு­கின்­றனர் என்­பது தெளி­வாக விளங்­கி­விட்­டது.

அன்று மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் தோற்­க­டிக்க உத­வி­ய­வர்கள் தான் இன்றும் பொது எதி­ர­ணியை இயக்கி ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இவர்கள் தேவை முழு­வதும் எமது பல­மான அணையை வீழ்த்தி நிரந்­த­ர­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என்­ப­து­வே­வாகும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாய்ப்பு

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் கட்­சியை ஒன்­றி­ணைந்து பல­மான கூட்­ட­ணி­யாக செயற்­பட நாம் பாடு­பட்டு வரு­கின்றோம். அனை­வ­ரதும் கருத்­துக்கும் முக்­கி­யத்­துவம் கொடுத்து சக­லரின் நிலைப்­பா­டு­க­ளையும் ஆராய்ந்து நாம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­காக பாடு­ப­டு­கின்றோம். ஆனால் இவர்கள் பாத­யாத்­திரை, போராட்டம் என்று கூறிக்­கொண்டு எம்மை வீழ்த்­தவே முயற்­சிக்­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த பாத­யாத்­திரை முற்­று­மு­ழுதாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வாய்ப்­பாக அமைந்­துள்­ளது. அல்­லது இவர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளனர்.

தரக்குறைவாக நடந்துகொண்டனர்

மேலும் இவர்கள் பாத­யாத்­திரை முன்­னெ­டுத்த நிலையில் ஆரம்­பத்தில் இருந்தே தகாத வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தியும், எமது கட்­சியை விமர்­சித்தும், ஜனா­தி­ப­தியை விமர்­சித்­துமே செயற்­பட்­டனர். அது மட்­டு­மல்­லாது கட்சி தலைமை அலு­வ­ல­கத்தின் முன்னால் வரும்­போது மிகவும் தரக்­கு­றை­வாக இவர்கள் நடந்­து­கொண்­டனர். ஏற்­கத்­த­காத வகையில் இவர்கள் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தின் முன்னால் நடந்­து­கொண்ட விதத்தை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இவர்­களை இனி­மேலும் கட்­சிக்குள் வைத்­தி­ருப்­பது தொடர்பில் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் தவ­றாக நடந்­து­கொண்ட உறுப்­பி­னர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். இது தொடர்பில் கட்­சியில் மத்­தி­ய­குழு கூடி ஆராய்ந்து தீர்­மானம் எடுக்கும்.
அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் நாம் தீர்­மானம் எடுக்க அவ­சியம் இல்லை. ஆரம்­பத்தில் இருந்து அவ­ருக்­கான தீர்­மா­னங்­களை அவரே எடுத்­துக்­கொள்­கின்றார்.

இப்­போதும் அவரே அவ­ருக்­கான தீர்­மா­னத்தை எடுத்­து­விட்­டனர். ஒரு காலத்தில் செங்­க­ம்பள விரிப்பில் கம்­பீ­ர­மாக நடந்­து­வந்­தவர் இன்று தார் வீதி­களில் நடக்க வேண்­டிய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டு­விட்டார் என்று நினைக்கும் போது எமக்கும் கவ­லை­யாக உள்­ளது. அவரை சுற்­றி­யுள்ள கூட்­ட­ணி­யினர் இதை­வி­டவும் கீழ் மட்­டத்­திற்கு அவரை கொண்­டு­சென்­று­வி­டு­வார்கள் என்ற பயமும் எம்­மத்­தியில் உள்­ளது என அவர் குறிப்­பிட்டார்.

துமிந்த திசாநாயக்க

செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக கருத்து தெரி­விக்­கையில்,
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை இரண்­டாக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ முயற்­சித்­து­வரும் நிலையில் கட்­சியை எவ்­வா­றா­வது ஒன்­றாக்கி பல­மான நிலையில் வைத்­தி­ருக்­க­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சிக்­கின்­றார். கை நழு­விப்­போன அதி­கா­ரத்தை மீண்டும் தன­தாக்­கிக்­கொள்ள மஹிந்த முயற்­சிக்­கின்றார்.

 தாம் அதி­கா­ரத்தில் இருந்­த­போது எவ்­வாறு சர்­வா­தி­கார பலத்தை கையில் வைத்­துக்­கொண்­டாரோ அதே அதி­கா­ரங்­களை எவ்­வா­றா­வது மீண்டும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற முயற்­சி­யி­லேயே தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்டு வரும்­கின்றார். இன்று பாத­யாத்­திரை செல்­வதும் கட்­சியை இரண்­டாக்­கப்­பார்ப்­பதும் அந்த ஒரு நோக்­கத்­திற்­கா­க­வே­யாகும்.

அதேபோல் எந்த வகை­யி­லேனும் ஆட்­சியை மீண்டும் கைப்­பெற்­றுவேன் என்று அவர் போரா­டு­கின்றார். ஆனால் தற்­போது இருக்கும் அர­சியல் அமைப்பின் பிர­கா­ரமும், சட்ட அடிப்­ப­டை­யிலும் நான்­கரை ஆண்­டுகள் ஆட்­சியை கலைக்க முடி­யாது என்­பது இவர்கள் எவ­ருக்கும் தெரி­ய­வில்லை. எனினும் தன்னை தோற்­க­டித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தற்­போ­தைய தலை­மைத்­து­வத்­தையும், தனக்கு எதி­ராக வாக்­க­ளித்த மக்­க­ளையும் பழி­வாங்­க­வேண்டும் என்ற எண்ணம் மட்­டுமே அவ­ரிடம் உள்­ளது.

 அதற்­காக இலட்­சக்­க­ணக்­கான பொது­மக்­களை ஒன்று திரட்டி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராட முன்­வ­ரு­வ­தாக கூறி­னார்கள். ஆனால் மக்கள் யாருடன் உள்­ளனர் என்­பது இன்று இவர்­க­ளுக்கு விளங்­கி­யி­ருக்கும் என அவர் குறிப்­பிட்டார்.

டிலான் பெரேரா

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா கருத்து தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை இரண்­டாக்கி அதன் மூலம் நீண்­ட­கா­லத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனித்த அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்டும் என்­பதே பொது எதி­ர­ணி­யி­னரின் நிலைப்­ப­டகும். ஐக்­கிய தேசிக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­க­திற்கு முன்­பாக அமை­தி­யாக வந்­த­வர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தின் முன்னால் மிகவும் தரக்­கு­றை­வாக நடந்­து­கொண்­ட­வி­தத்தில் இந்த உண்மை வெளிப்­பட்­டு­விட்­டது. கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தின் முன்னால் இவர்கள் தரக்­கு­றை­வாக நடந்­து­கொண்­ட­மையும், அசிங்­க­மாக கூச்­ச­லிட்ட போதும் தலைமைத்துவத்தை அவமதித்தபோதும் இதில் வெறுமனே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே உள்ளடக்கப்படவில்லை.

மாறாக கட்சியின் தந்தையான எஸ். டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷவையும் கூட கட்சியின் உறுப்பினர்கள் அவமதித்துவிட்டனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

இவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதாக கூறுகின்றனர். அரசியல் அமைப்பின் பிரகாரம் அது இப்போதைக்கு முடியாது. ஆகவே மாற்றுவழி இருக்கின்றது என்றால் அது இராணுவப் புரட்சி மூலமாக மட்டுமே முடியும். ஆனால் இலங்கையில் இராணுவப்புரட்சிக்கு மட்டுமல்ல இராணுவ ஆட்சிக்குக் கூட மக்கள் தயாரில்லை. அதனால் தான் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தை மக்கள் தோற்கடித்தனர். எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகிந்தவைவின் நிலையை நினைக்கும் போது எமக்கும் கவ­லை­யாக உள்­ளது. slfp மகிந்தவைவின் நிலையை  நினைக்கும் போது எமக்கும் கவ­லை­யாக உள்­ளது. slfp Reviewed by Madawala News on 8/03/2016 12:26:00 PM Rating: 5