ஜும்மா பள்­ளி­வா­சலின் மாடி­யி­லி­ருந்து விழுந்த எஸ்.எம். பைசால் வபாத். #Srilanka



ஜும்மா பள்­ளி­வா­சலின் இரண்டாம் மாடி­யி­லி­ருந்து கீழே விழுந்த நபர், ஆபத்­தான நிலையில் தியத்­த­லாவை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டபின், சிகிச்சை பல­னின்றி மர­ண­மானார்.

வெளிமடைப் பகு­தியின் குரு­த­லாவை ஜும்மா பள்­ளி­வா­ச­லி­லேயே, நேற்று முன்தினம் மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கொமர்சல் வங்­கியின் அக்­க­ரைப்­பற்று கிளை முகா­மை­யா­ள­ரான 43 வயது நிரம்­பிய எஸ்.எம். பைசால் என்­ப­வரே மர­ண­மா­ன­வ­ராவார்.

விடு­மு­றையில் வீடு வந்­தி­ருந்த, வங்கி முகா­மை­யாளர் மார்க்க  கட­மை­களை நிறை­வேற்ற ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றி­ருந்த போதே, இரண்டாம் மாடி­யி­லி­ருந்து தவறி விழுந்­துள்ளார்.

உட­ன­டி­யாக இவர் பொர­லந்த அர­சினர் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று, அங்­கி­ருந்து தியத்­த­லாவை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, மரணமானார்.
ஜும்மா பள்­ளி­வா­சலின் மாடி­யி­லி­ருந்து விழுந்த எஸ்.எம். பைசால் வபாத். #Srilanka ஜும்மா பள்­ளி­வா­சலின் மாடி­யி­லி­ருந்து விழுந்த எஸ்.எம். பைசால் வபாத். #Srilanka Reviewed by Madawala News on 8/12/2016 09:59:00 AM Rating: 5