Accaddemy

மறைமுகமாக வடிவமைக்கப்படும் பிரதேசவாதம்.... #Srilanka



இன்று முக்கிய பேசுபொருளாக இருக்கின்ற விடையம்:-   மூதூர் தள வைத்தியசாலையின் தரம் உயர்த்தப்பட்டதிற்கு எதிராக ஒரு சில மூதூர்,  கிண்ணியா சகோதர்களினால் மேற்கொள்ளப்படும் எதிர் நடவடிக்கைகள் மூலம்  பிரதேசவாதச்சிந்தனை கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம்.

இரண்டு ஊர்களும் பலமான பலவீனமான விடயங்களைக் கொண்டிருக்கின்றன.சுட்டிக்காட்டுவதோ அல்லது வாதங்கள் புரிவதோ வரவேக்கத்தக்கதல்ல. கிண்ணியா வைத்தியசாலை தரம் உயர்தப்பட வேண்டாம் என்று எவரும் குரல் கொடுக்கயில்லை.ஆனால் சில யதாத்தங்களை நீங்களும் உள்வாங்க வேண்டும்.

இரண்டு முறை தகுதியான தரமான வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டிருந்தும், அவர்களை உள்வாங்கி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பை உறுதியடையச் சொய்து அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்லாமல் அவர்களை இரவோடு இரவாக நியமனம் இரத்துச் செய்யப்பட்டது ஏன்? எதற்காக?
சிலர் தங்கள் சுய தேவைகளுக்காக வைத்தியசாலையை இற்றை வரையும் பயன்படுத்துகின்றனர்.அதற்கு அரசியல் பலம் பக்க துணையாக இருப்பதுதான் கவளையான விடயமாகும்.

இது வரையும் நாம் எமது வைத்தியசாலையின் அபிவியாத்திக்காக குரல் கொடுக்க காரணம் யார் யார்? அதனை இனம் காண்போம்.

கிண்ணியா வைத்தியசாலை பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டாலும் பரவாயில்லை அதற்க்கு எதிராக எப்படி குரல் கொடுக்க முடியும்.

எம்மை சரியாக வழிநடத்தாத,..வளங்களை சரியாக பங்கிடாத ...மாற்றான் பிள்ளை மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் அதிகாரிகளை யார் இனம்காட்டுவது?

இதுவரையு தள வைத்தியசாலையாக இருந்தும் ஆளனியோ அல்லது பௌதீக வளங்களோ வளங்கப்பட்டு அதற்கு ஏற்றால்போல் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா?

தற்போதைய நிலையில் அரசியல் ஆதாயமாக சிலர் இதனை கையில் எடுத்துள்ளார்கள். இதனை சரியாக இனங்காணவும், மக்களுக்கு சரியாக அடயாளப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

தயவுசெய்து முகநூல் பக்கங்களை எமது ஒற்றுமையை சிதைக்கக் கூடிய வகையில் பயன்படுத்த வேண்டாம். உங்கள் விரல்களினால் எமது கூட்டுச் சக்தியை இன்னும் இன்னும் வலுவடையச் செய்ய வேண்டுய கால கட்டத்தில்தான் நாம்மிருக்கின்ரோம்.
எமது ஒற்றுமையை சில குறுகிய அரசியல் இலாபங்களுக்காய் நாசம்மாக்கிட வேண்டாம்...

இரண்டு வைத்தியசாலைகளிலும் மூதூர், கிண்ணியா சகோதர்கள் வேலைசெய்கிறார்கள,வைத்திய சேவையென்பது மனிதாபிமான சேவையாகும். அது அவர்களது மனநிலையுடன் சம்மந்தப்பட்டது..அவர்களது சேவை பிரதேசவாத சிந்தனைகளால் நோய்படாமலிருக்க தயவு செய்து குறுகிய வாதங்களை கைவிடுவோம்.,..

கந்தளாய் வைத்தியசாலை அபிவியத்தி செய்யப்பட்ட போது கண்டுகொள்ளாத நாம் மூதூர் வைத்தியசாலை என்பதற்காய் எதிராக குரல் கொடுப்பதை விட்டு விட்டு தங்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்காய் எதுவரையும் போக முடியுமோ அது வரையும் போவோம்...

சகோதரர் இக்ரிமா போன்ரோர் விரைந்து செயல்படுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிரேன்..தற்போதைய நிலையில் மூதூர்,கிண்ணிய புத்திஜிவிகளது கூட்டமைப்பின் தேவை பலமாகவும் பாலமாகவும் உணரப்படுகிறது.
என்று தெரிவித்தார் முகம்மட் நஸாத் முகம்மட் நஸீர்

றபீக் சர்றாஜ்
மூதூர்
மறைமுகமாக வடிவமைக்கப்படும் பிரதேசவாதம்.... #Srilanka மறைமுகமாக வடிவமைக்கப்படும் பிரதேசவாதம்.... #Srilanka Reviewed by Madawala News on 8/17/2016 10:40:00 AM Rating: 5