Oceas

முக்காடு அணிய பெண் போலீஸ் உறுப்பினர்களுக்கு அனுமதி. t



துருக்கி:

சென்ற மாதம் இராணுவப்பயிற்சிக் கல்லூரிகளினுள் தலையை மறைத்த பெண்கள் செல்வதற்கு இதுவரைகாலமும் விடுக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டது.

இதனால் பட்டம்பெறும் இராணுவ மற்றும் போலீஸ் மாணவர்களின் தாய்மார் பட்டமளிப்பு விழாக்களில் தலையை மறைத்தவர்களாக கலந்துகொள்ளக்கூடுய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதேபோன்று  நேற்று,  பெண் போலீஸ் உறுப்பினர்களுக்கு தலையை மறைப்பதற்கு எதிராக இருந்த தடைகளனைத்தையும் அரசாங்கம் தளர்த்தியுள்ளதனால் இனிமேல் விரும்பிய பெண் போலீஸ் உறுப்பினர்கள் தலையை மறைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 "சகல அரச நிறுவனங்களிலும் ஜனநாயகம்" என்ற வேலைத்திட்டத்தினை 2013ஆம் ஆண்டு அப்போதய பிரதமர் #தய்யிப்_எர்தொஆன் கொண்டுவந்திருந்தமையும் அதன் பிற்பாடு ஆசிரியர்கள் நீதிபதிகள் சட்டத்தரணிகள் என்று பலரும் இதனால் பயனடைந்து வருகின்றமையும் இதுபோன்ற நடவடிக்கைகளினால் #முஸ்லீம்_பெண்கள் சகல அரச நிறுவனங்களிலும் சுதந்திரமாக வேலை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Zafir Zubair
Istanbul. Turkey.
முக்காடு அணிய பெண் போலீஸ் உறுப்பினர்களுக்கு அனுமதி. t முக்காடு அணிய பெண் போலீஸ் உறுப்பினர்களுக்கு அனுமதி. t Reviewed by Madawala News on 8/28/2016 07:58:00 PM Rating: 5