Free Space

புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. #train



புகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நிரம்பிய உதவி கல்வி இயக்குனரே உயிரிழந்துள்ளார்.
புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. #train புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. #train Reviewed by Madawala News on 8/08/2016 08:56:00 AM Rating: 5