Sunday, August 28, 2016

ஊவா மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஒரு முஸ்லீமையாவது UNP நியமித்திருக்கவேண்டும்...

Published by Madawala News on Sunday, August 28, 2016  | 


(அபூ ஷிபா – பதுளை)
நான் உண்மையான பௌத்தன் . ஆனால் இனவாத பௌத்தன் இல்லை. அண்மையில் பஃவெலிமட முஸ்லிம் ம வி யின் ஆரம்ப பிரிவிற்காக மூன்று மாடி கட்டடம் ஒன்றிற்காக நிதி ஒதுக்கீடு செய்து  அதற்கான அனைத்து ஆரம்ப கட்ட வேலைகளும் பூர்த்தியான நிலையில் அடிக்கல் நடுவதற்காக சென்ற வேளை பொதுபல சேனா இயக்கத்தால்  பாரியதொரு பிரச்சினை ஏற்படுத்தப் பட்டது. 

உரிய கட்டிடத்திற்கான இரண்டு ஏக்கர் காணி எல் ஆர் சி இடமிருந்து முறையாக பெறப் பட்டிருந்தாலும்இ அந்தக் காணியை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறி பிரச்சினை ஏற்படுத்தினார்கள். நான் இவ்விடயமாக  இரு தரப்பினரையும் ஒன்று சேர்த்து பேசிய போது எதிர் தரப்பில் இருந்தவர்கள் பிரபலமான ஐ தே க காரர்கள் என்பதை உறுதியாக என்னால் கூற முடியும் . குறிப்பாக  ' முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஒரு கோடிரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டு நான் முஸ்லிம்களுக்காக வேலை செய்கின்றேன் ' என்று குறிப்பிட்ட கூட்டத்தின் போது பகிரங்கமாக என்மீது படுதூறு சுமத்தியவர் 'நுகதலாவ கெலும்' என்பவராவார். அவர் வெளிமட ஐ தே க அமைப்பாளர் ரவி சமரவீரவின் தீவிர ஆதரவாளரும் ஐ தே க முழுநேர தொண்டரும் ஆவார். பொது பல சேனா பக்கம் இருந்து கொண்டு வெளிமட முஸ்லிம் ம வியின் ஆரம்ப பிரிவு காணியை விட்டுக் கொடுக்க முடியாது என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த வெளிமட சிங்கள முதலாளி மார் தொடக்கம் அனைவருமே ஐ தே க முழுநேர ஆதரவாளர்களாகும் என்பதை இவ்விடத்தில் நான் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகின்றேன். ஆகவே தான் நான் கூறுகின்றேன் இவர்கள் முஸ்லிம் கள் விடயத்தில் 'டபல் கேம்' விளையாடுகின்றார்கள்.' என்று ஊவா மாகாண முதலமைச்சர் திரு சாமர சம்பத் தசநாயக அவர்கள் தெரிவித்தார்கள்.
  
மலையக முஸ்லிம் கவுன்சிலின் அமைப்பின் வேண்டுதலுக்கிணங்க அல் புர்கான் – கல்வி மற்றும் மனித நேய சேவைகளுக்கான  அமைப்பின் மூலம் பதுளை பஃ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்காக புதிதாக நிமானிக்கப் பட்ட தொழுகை அறை மற்றும் பல்தேவை கட்டிடத் தொகுதி திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தை ஊவா முதல்வர் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் திருமதி எம் ஏ ஹைருன் நிஷா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் கௌரவ அதிதிகளாக  அல் புர்கான் – கல்வி மற்றும் மனித நேய சேவைகளுக்கான  அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான  கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளருமான மௌலவி அல் ஹாஜ் தௌவபிக் அவர்களும் ஊவா மாகாண சபை உறுப்பினர் திரு ருத்ர தீபன் வேலாயுதம் அவர்களும்  பங்கேற்றிருந்தார்கள்.

மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய முதலமைச்சர் அவர்கள் ' ஒரு சமூகம் என்ற வகையில் அரசியலில் என்ன நடக்கின்றது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்கள் மத்தியில் இருக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் ஊவா மாகாண சபையில் பல வெற்றிடங்கள் ஏற்பட்டன. 

பதுளை தமிழ் சமூகத்திற்காக நான்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஊவா மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள்.ஆனால் முஸ்லிம்களுக்காக ஒருவரும் இருக்க வில்லை. கடந்த மாகாண சபை தேர்தலில் ஐ தே க சார்பாக போட்டியிட்ட சச்சிதானந்தன் அவர்களும் இ நசீர் அவர்களும் தலா பதினைந்தாயிரம் வாக்குகளை பெற்றிருந்தார்கள். 

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவதில் உண்மையாக ஐ தே கட்சிக்கு ஆர்வமிருந்தால் மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அந்த உறுப்புரிமையை நசீருக்கு வழங்கி இருக்க வேண்டும். 

ஆனால் அவர்கள் அந்த இடத்தை சச்சிதானந்தனுக்கு வழங்கி  ஏற்கனவே நான்கு உறுப்பினர்களை பெற்றிருந்த தமிழ் சமூகத்திற்கே ஐந்தாவது உறுப்பினரையும் பெற்றுக் கொடுத்தார்கள். நசீரை நியமித்திருந்தால் இன்று நீங்கள் சுட்டிக் காட்டிய குறைகளை நசீரவர்கள் மாகாண சபையில் பேசியிருப்பார்.

என்னிடத்தில் இனவாதமில்லை. நான் யதார்த்ததையே பேசுகின்றேன். மாகாண முதல்வராக பதவியேற்ற  குறுகிய காலத்தில் முஸ்லிம் பாடசாளைகளுக்கே கூடுதலான நிதிகளை ஒதுக்கியுள்ளேன். 

கடந்த குறுகிய காலத்திற்குள் பஃகஹ கொள்ள முஸ்லிம் ம வி ரதம்ப முஸ்லிம் வித்தியாலயம்  குருதலாவ முஸ்லிம் ம வி வெளிமட முஸ்லிம் ம வி லுனுகல மு ம வ அல் அதான் ம வி போன்ற முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்று மாடி இரண்டு மாடி கட்டிடங்களையும் விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் பாதைகள் மற்றும் விளையாட்டு மைதானகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை வழங்கியுள்ளேன். தேமொதர பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலை அமைக்க நடவடிக்கை மேட்கொண்டுள்ளேன். ஆகவே நீங்கள் இங்கே முன்வைத்த குறைபாடுகளை பெற்றுத் தருவதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. அதிபரின் மன வேதனையையும் கவலையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது . ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போதும் முயற்சியை பார்க்கும் போதும் நீங்கள் சற்று வேகம் கூடியவர்கள் என்று நானும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 

அதிகாரிகள் நிர்வாகிகள் சில வேளை உதாசீனமாக வேளை செய்வார்கள். அதற்காக நாங்கள் அவர்களுடன் முட்டி மோதி வேளை செய்ய முடியாது. சற்று பொறுமையாக வேளை செய்யுங்கள் . இந்த பாடசாலைக்கு தேவையான அத்தினை தேவைகளையும் நான் கூடிய சீக்கிரம் பெற்றுத் தர இவ்விடத்தில் உறுதியளிக்கின்றேன். 

இன்னும் சில வருடங்களில் இந்த மகளிர் கல்லூரி தேசிய ரீதியில் புகழ் பெற்ற முதலாம் நிலை பாடசாலையாக மாறும் . அதற்காக நானும் உங்களுடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கின்றேன்' என்றும் கருத்துரைத்தார்.

இந் நிகழ்வில் மலையக முஸ்லிம் கவுன்சில் ஆலோசகரும் பதுளை கிரீன் மவுண்ட் ஹோட்டல் உரிமையாளருமான அல் ஹாஜ் சாதிகீன் அவர்களால் மாகாண முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டது. அத்துடன் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் மாகாண முதல்வருக்கு நினைவுச்சின்னம் வழங்கப் பட்டது.  


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top