"உயர்ந்த கைகள்- குவைத்" (Upper Hands- Kuwait) அமைப்பு உதயம்.




குவைத் நாட்டில் உள்ள இலங்கையர்களால் "உயர்ந்த கைகள்- குவைத்" என்ற அமைப்பு உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வறிய மாணவர்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் உருவாக்காப்பட்டுள்ள இவ் அமைப்பில் இலங்கையை சேர்ந்த எவரும் அங்கத்துவத்தை பெறமுடியும்.

ஆரம்ப கட்ட உறுப்பினர்களாக தற்போது ஏறத்தாள 30 பேர் உள்ளனர். தங்களது மாதாந்த வருமானத்தில் ஒரு பகுதியை இவ் அமைப்புக்கு வழங்கி அந்த நிதி மூலம் ஏழை மாணவர்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அனைவரும் உறுதிபூண்டுள்ளனர்.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாதமும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான உதவிகள் ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடையை சேர்ந்த வறிய மாணவர்களுக்கு தலா 4,000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். இது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த அமைப்பில் இணைந்து சமூகத்தில் உள்ள தேவை உடையோரின் அத்தியவசிய தேவைகளையாவது இனங்கண்டு பூர்த்தி செய்திட விரும்புவோர் தொடர்புகளுக்கு

முஹம்மது ஜௌபர் (குவைத்)- 00 965 9956 8019
முஹம்மது இர்சாத் (குவைத்) - 965 557 27367
முஹம்மது முர்சிதீன் (இலங்கை) - 94 777 358660


-ஓட்டமாவடி அப்துல்லாஹ்-
"உயர்ந்த கைகள்- குவைத்" (Upper Hands- Kuwait) அமைப்பு உதயம். "உயர்ந்த கைகள்- குவைத்" (Upper Hands- Kuwait) அமைப்பு உதயம். Reviewed by Madawala News on 8/16/2016 09:23:00 PM Rating: 5