அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானால் என்ன நடக்கும்..? ஒரு சுவாரஸ்ய பார்வை. #usa



ஆக்கம் - தில்சான் முஹம்மது  ©

சர்ச்சைக்குரிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று முதல் நாள் வெள்ளை மாளிகையில் பென்டகன் , CIA மற்றும் FBI அதிகாரிகளை சந்திக்கிறார்.

Trump: நாம் ஐஸ் ஐஸை உடனடியாக அழிக்க வேண்டும்

CIA: நாம்தான் அதை உருவாக்கியதால் எங்களால் முடியாது சேர். அவர்களை அழித்து விட்டால் அரபு நாடுகளுடன் எண்ணை பேரம் பேச்சுக்கள் செய்ய முடியாது.

Trump: ஒகே!! அப்படிஎன்றால் பாகிஸ்தானுக்குரிய ஆயுத உதவிகளை நிறுத்துவோம்

CIA: அது எங்களால் முடியாது சேர்..

Trump: ஏன் ?

CIA: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உரசல்கள் இருக்காது.

Trump: அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை

CIA: பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்சினை இல்லாவிட்டால் இந்தியா நம்மிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யாது. தொடர்ந்தும் இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை கொடுத்துக்கொண்டிருந்தால் இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் அடித்துக்கொண்டு பிசியாகி இருப்பார்கள் .

Trump: ஆங்..சரி.. உடனடியாக தாலிபான்களை அழிப்போம்
CIA: அது எங்களால் முடியாது சேர். ரஷ்யாவுக்கு எதிராகவே அன்று நாம் தாலிபான்களை உருவாக்கினோம். ஆனால் அவர்கள் இன்று பாகிஸ்தானோடு சண்டையிட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் இவர்கள் விஷயத்தில் பிசியாக இருக்கிறது. இதனால் அதன் அணுஆயுத தயாரிப்பும் தடைப்பட்டுள்ளது.

Trump: அப்படியா!! அப்படிஎன்றால் வளைகுடா நாடுகளை அழிப்போமா ??
Pentagon: அதை எம்மால் முடியாது சேர். எமக்குரிய மசகு எண்ணை தேவைக்காக நாம்தான் அந்த அரசுகளை பாதுகாத்துவருகிறோம்.

Trump: அப்படியா!! ஒரு அருமையான ஐடியா , ஈரானை ஆக்கிரமிப்போம்
Pentagon: அது தற்போதைக்கு முடியாது சேர்.

Trump: ஏன் முடியாது ?
CIA: அவர்களுடன் நாம் தற்போது ஒரு டீல் அடித்துக்கொண்டு இருக்கிறோம்.
Trump: என்ன டீல் ?

CIA: நமக்கு அவர்களின் எண்ணை தேவை. அதேநேரம் இந்த அரபு நாடுகளையும் அடக்கவேண்டும். நாம் இவர்களின் மேல் கைவைத்தால் சிரியாவில் ரஷ்யா புகுந்தத்தை போல இங்கும் புகுந்து நமது திட்டங்களை குழப்பி விடுவார்கள் .

Trump: அப்படிஎன்றால் மீண்டும் ஒருமுறை ஈராக்கை ஆக்கிரமித்தால் என்ன ?
CIA: சேர், எமது ஒரு நண்பன் ஐஸ்ஐஸ் ஈராக்கின் ஒருபகுதியையும் அடுத்த நண்பன் குர்திஸ்காரர்கள் ஈராக்கின் மறுபகுதியையும் ஏற்கனவே ஆக்கிரமித்துவிட்டார்கள்

Trump: ஏன் முழு இராக்கையும் ஆக்கிரமிக்க கூடாது ?
CIA: மிச்சம் இருக்கும் பகுதியை ஆட்சி செய்யும் அரசாங்கமும் நமது கையாள்தான். இவர்கள் மூன்று தரப்பும் ஆளாளுக்கு அடித்துக்கொண்டு சாவுதால் நமக்கு அங்கே எந்தவேலையும் இல்லை சேர்

Trump: நான் முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடை செய்யப்போகிறேன்.
FBI: அது எம்மால் முடியாது சேர்

Trump: ஏன் முடியாது.
FBI: முஸ்லிம்களை வைத்துத்தான் அமெரிக்கரகளை பயங்காட்டி நமது சில திட்டங்களை செய்துகொண்டிருக்கிறோம்.

Trump: உடனடியாக சட்டவிரோத குடியேற்றவாசிகள், விசா இல்லாமல் வேலை செய்பவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற போகிறேன்
Border patrol: அதை செய்ய முடியாது சேர்.

Trump: ஏன் முடியாது ?
Chief of staff: அவர்கள் எல்லாம் போய்விட்டால், எமது வெள்ளை மாளிகை ஐடி வேலைகளை கூட பங்களூருவில் இருக்கும் கம்பனிகளுக்கு அவுட் சோர்ஸ் பண்ணவேண்டி வரும். பங்களூரு இந்தியாவில் இருக்கிறது சேர் !!

Trump: அப்படிஎன்றால் என்னை என்ன கண்றாவியை செய்ய சொல்கிறீர்கள்?
CIA: சேர் !! உலகத்திலும் அமெரிக்காவிலும் என்ன நடக்கணும் என்பதை நாம் பார்த்துக்கொள்கிறோம் . நீங்கள் ஒபாமா இருந்தது போல் பேசாமல் வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளை அனுபவித்துக்கொண்டு நடப்பதை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்

ஆக்கம் - தில்சான் முஹம்மது  ©
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானால் என்ன நடக்கும்..? ஒரு சுவாரஸ்ய பார்வை. #usa அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானால் என்ன நடக்கும்..?  ஒரு சுவாரஸ்ய பார்வை. #usa Reviewed by Madawala News on 8/09/2016 02:29:00 PM Rating: 5