Free Space

Video இணைப்பு... மும்மன்ன பிரதேசத்தை வைத்து சிலர் அமோகமாக அரசியல் செய்கின்றனர்.



Dr. ஷாபி -

குருநாகல் வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் ஒரு விடையத்தை கூரவேண்டும் அதாவது குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசம் தொடர்பாக எப்போது பிரச்சினை ஆரம்பித்ததோ அன்று முதல் இன்று வரை நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலமையில் களத்தில் இருந்து செயற்பட்டு வந்தோம்..

இருந்தாலும் இன்று என்னை அதிகமாக நேசிக்கக் கூடிய குருநாகல் மாவட்ட மக்களிடையே புறம்தல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று குருநாகல் அரசியல் வாதிகள் செய்ற்ப்படுவதை நாம் இன்று இணையதளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

நாம் அன்று முதல் இன்றுவரைக்கும் அவ்வாரான ஒரு அரசியலை செய்ததில்லை இவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது இன்று என்னவோ நாம்தான் இதனை இயக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பது போல தமது செயற்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்தில் விளையாட்டு மைதானப் பிரச்சினை என்று வந்த போது ஊர் மக்கள் முதலில் எம்மிடத்தில் தான் வந்தார்கள் நாம் அவர்களுடன் அப்போது எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதனை பிரதேச பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் ஊர் மக்கள் அறிவார்கள்.

இன்று பொதுபல சேனாவின் ஞானசார தேரர் உரை நிகழ்த்த வருகின்றார் என்பதை முன்பே அறிந்த நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களைத் தொடர்பு கொண்டு அணைத்து ஏற்ப்பாடுகளையும் செய்திருந்தோம் ஆனால் இந்த அரசியல் வாதிகள் இன்று எமது செயற்ப்பாடுகளை வைத்துக் கொண்டு பதவிக்காக அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நாம் இதுவிடையத்தில் எம்மை பெரிசுபடுத்தி பேச வேண்டும் என்று விரும்பவில்லை நாம் குறல் கொடுத்த எமது மக்களை திசைதிருப்ப வேண்டாம் என்பதனையும் இணையதளங்களுக்கு பொய்யான செய்திகளை அனுப்பி அரசியல் செய்ய வேண்டாம் என்று உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மும்மன்ன பிரதேசம் தொடர்பாக தனது செயற்பாடுகளை மிகவும் நிதானமான முறையில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார் என்பதனை அவர்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்று நான் உங்களிடம் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

தயவு செய்து  கீழ்வரும் வீடியோவை பாருங்கள் மும்மன்னை பிரச்சினை தொடர்பாக நான் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பதை உங்களால் புறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

Video இணைப்பு... மும்மன்ன பிரதேசத்தை வைத்து சிலர் அமோகமாக அரசியல் செய்கின்றனர். Video இணைப்பு...  மும்மன்ன பிரதேசத்தை வைத்து சிலர் அமோகமாக அரசியல் செய்கின்றனர். Reviewed by Madawala News on 8/11/2016 08:57:00 AM Rating: 5