முஸ்லிம் சமூகத்தில் நிறைய அலவி மவ்லானாக்களை உருவாக்க வேண்டும். #wasu



 ARA.Fareel

முஸ்லிம் சமூ­கத்தில் இட­து­சாரிக் கொள்­கை­க­ளு­டைய முற்­போக்­கு­வா­திகள் மிகவும் குறை­வா­கவே இருக்­கி­றார்கள்.


முஸ்­லிம்­க­ளி­டையே முற்­போக்கு கொள்­கை­களைப் பரப்ப நாம் அலவி மௌலானா போன்­ற­வர்­களை உரு­வாக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புரட்­சி­கர சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

திங்­கட்­கி­ழமை மாலை கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் நடை­பெற்ற மர்ஹூம் அலவி மௌலா­னாவின் நினைவு விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘அலவி மௌலானா தொழி­லா­ளர்­களின் நலன்­க­ளுக்­காக குரல் கொடுத்­தவர். அவரை சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தங்­க­ளது சகோ­த­ர­ரா­கவே கரு­தி­னார்கள்.

முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்­தவர் அவர். இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒரு பிரி­வினர் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கி­றார்கள்.

ஏனையோர் இணைந்த எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­கி­றார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் 2 வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை நடாத்த ஒப்­பந்தம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தரப்­பினர் இப்­போது 5 வரு­டங்­க­ளுக்கு ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளார்கள்.

ஆனால் இணைந்த எதிர்க்­கட்­சிக்கே அலவி மௌலா­னாவின் ஆத­ரவு கிடைத்­தது. அதனால் இணைந்த எதிர்க்­கட்­சியின் பய­ணமே சரி­யா­னது என அலவி மௌலானா அங்­கீ­க­ரித்து ஆத­ரவு வழங்­கினார்.

அலவி மௌலானா எவ­ருக்கும் பயப்­ப­டா­தவர். பய­மின்றி தனது கொள்­கை­களை முன்­னெ­டுப்­பவர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சிக் காலத்தில் அவ­ரது உற­வி­னர்கள் இருவர் காணா­மற்­போகச் செய்­யப்­பட்­டார்கள். அவர்கள் கொலை செய்­யப்­பட்­ட­தாக பின்னர் தக­வல்கள் வெளி­யா­கின. அலவி மௌலா­னாவின் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக அவரைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே இவ்­வாறு செய்­யப்­பட்­டது.  அலவி மௌலானா தாக்­கப்­பட்டு பலத்த காயங்­க­ளுக்­குள்­ளானார்.

அவர் யாரால் தாக்­கப்­பட்டார் என்­பது அறி­யப்­பட்­டாலும் அவர் தன்னைத் தாக்கிய யாருக்கு எதி­ராகவும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்­பது அவ­ரது உய­ரிய பண்­பினை எடுத்­தி­யம்­பு­கி­றது. அவர் நாட்டின் தேசிய ஒற்­று­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் மிகவும் பாடு­பட்­டவர்.

அவர் முஸ்­லி­மாக இருந்­தாலும் சிங்­கள தமிழ் மக்­களும் அவரை தமது தலை­வ­ரா­கவே ஏற்றுக் கொண்­டி­ருந்­தனர். முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்கு போரா­டி­யவர்.

முஸ்­லிம்­க­ளுக்கு பாதகங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றைக் களைவதற்கு முன்னின்று செயற்பட்டவர். அவரது முற்போக்கு கொள்கைகள் முஸ்லிம் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும். இதற்கென அவர் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தில் உருவாக வேண்டும் என்றார்.
முஸ்லிம் சமூகத்தில் நிறைய அலவி மவ்லானாக்களை உருவாக்க வேண்டும். #wasu முஸ்லிம் சமூகத்தில் நிறைய அலவி மவ்லானாக்களை உருவாக்க வேண்டும். #wasu Reviewed by Madawala News on 8/24/2016 06:21:00 PM Rating: 5