Accaddemy

உய‌ர் த‌ர‌த்தில் சித்திய‌டைந்த‌ மாணவர்கள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் புகுவ‌த‌ற்கு 1 1/2 வ‌ருட‌ங்க‌ள் காத்திருப்ப‌து மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும்


-பைஷல் இஸ்மாயில் - 

உய‌ர் த‌ர‌த்தில் சித்திய‌டைந்த‌ மாணவர்கள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் புகுவ‌த‌ற்கு சுமார் ஒன்ன‌ரை வ‌ருட‌ங்க‌ள் காத்திருப்ப‌து என்ப‌து மாண‌வ‌ர்க‌ளின் வாழ்க்கைக்கு செய்யும் மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும். இந்த நடவடிக்கையில் மாற்றம் இடம்பெறவேண்டும் என முஸ்லிம் உல‌மா க‌ட்சித் தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்று (22) தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பரீட்சைக்கு தோற்றி  மூன்று மாத‌ங்க‌ளின் பின்னர் ப‌ரீட்சை முடிவுக‌ள் வெளி வ‌ர‌த்த‌க்க‌ வ‌கையிலும் அத‌னூடாக‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அனும‌தியும் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் வ‌கையில் மாற்ற‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌ வேண்டும் எனவும் ஒரு மாண‌வ‌ன்  த‌ன‌து 18 வ‌ய‌தில் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் புகுவ‌த‌ற்கு ஏற்ற‌ வ‌கையில் அதற்கான சகல ஏற்பாடுக‌ளையும் இந்த நல்லாட்சி அரசு செய்ய‌ வேண்டும். அதுமாத்திரமல்லாமல் அதி ந‌வீன‌ சாத‌ன‌ங்க‌ள் நிறைந்துள்ள‌ இன்றைய‌ உல‌கில் இவ்வாறான‌ ஏற்பாடுக‌ள் செய்வ‌து என்ப‌து மிக‌ இல‌குவான‌தொன்று என்ப‌தை இந்த அர‌சு புரிந்து செய‌ற்ப‌ட‌ வேண்டும் என்றார்.

ஜி.சி.ஈ. சாதார‌ண‌ த‌ர‌த்தில்  சித்திய‌டைந்த‌ அனைவ‌ரும் உய‌ர் த‌ர‌த்தில் கல்வி க‌ற்க‌ முடியும் என்ற‌ வ‌கையில் க‌ல்வி திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ க‌ல்வி அமைச்சு முய‌ற்சி மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை வ‌ர‌வேற்கின்றேன்.  

முன்னர் உள்ள கால‌ங்க‌ளில் சாதார‌ண‌ த‌ரத்தில் தோல்விய‌டைந்த‌வ‌ர்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ ரீதியிலும் உய‌ர்த‌ர‌ ப‌ரீட்சையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடியும் என்றிருந்த‌து. பின்ன‌ர் இதில் மாற்றம் கொண்டுவந்து இவைகள் இல்லாமல் செய்யப்பட்டது. இந்த‌ நிலையில் அனைவ‌ரும் உய‌ர்த‌ர‌ம் க‌ற்கும் வ‌கையில் மீண்டும் வ‌ழி வ‌குப்ப‌து பாராட்ட‌த்த‌க்க‌து. இது விட‌ய‌மும் க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ அர‌சில் கார‌சார‌மாக‌ விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனாலும் தீர்மான‌ங்க‌ள் கொண்டு வ‌ரப்ப‌ட‌வில்லை.

அதே போல் க பொ த‌ . சா. த‌ர‌ம் என்ப‌து 11 வ‌ருட‌ங்க‌ள்  என்றிருப்ப‌தும் மாற்ற‌ப்ப‌ட்டு ஆண்டு 10ல் இந்த‌ப்ப‌ரீட்சைக்கு தோற்ற‌த்த‌க்க‌ வ‌கையில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் கூறினார்.
உய‌ர் த‌ர‌த்தில் சித்திய‌டைந்த‌ மாணவர்கள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் புகுவ‌த‌ற்கு 1 1/2 வ‌ருட‌ங்க‌ள் காத்திருப்ப‌து மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும் உய‌ர் த‌ர‌த்தில் சித்திய‌டைந்த‌ மாணவர்கள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் புகுவ‌த‌ற்கு 1 1/2 வ‌ருட‌ங்க‌ள் காத்திருப்ப‌து மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும் Reviewed by Madawala News on 9/22/2016 10:39:00 AM Rating: 5