Accaddemy

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டீ ஷேர்ட் வெளியீடும் நடைபவனியும்..



ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டீ ஷேர்ட் வெளியீடும் நடைபவனியும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டீ ஷேர்ட் வெளியீட்டு வைபவம் 16.09.2016 வெள்ளிக் கிழமை இரவு 7.00 மணிக்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு விசேட நிகழ்வாக பழைய மாணவர் சங்கம் நடத்தத் தீர்மானித்துள்ளது. தத்தமக்கு அளவான டீ ஷேர்;ட்டுக்களை உரிய நேரத்தில் சமூகமளித்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதே வேளை அடுத்த தினம் 17.09.2016 அன்று காலை நடைபவனி கல்லூரி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும். இந்த நிகழ்வில் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

கல்லூரியின் பழைய மாணவர்கள் இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கல்லூரி நூற்றாண்டைச் சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

தகவல்: அஷ்ரப் சிஹாப்தீன் -
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டீ ஷேர்ட் வெளியீடும் நடைபவனியும்..  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டீ ஷேர்ட் வெளியீடும் நடைபவனியும்.. Reviewed by Madawala News on 9/15/2016 11:12:00 AM Rating: 5