Free Space

கோத்தாவுக்காக இன்றைய வழக்கில் 100 கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆஜர்...


அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கு இன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு  பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று இவர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதித்து பிணை வழங்கியுள்ளார்.

இதற்கு அமைய தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிகள் 7 பேரும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ள அதேவேளை வெளிநாடு செல்லும் தேவை ஏற்படுமிடத்து அதற்காக மோஷன் ஒன்றின் மூலம் அதனை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் பிரதிவாதியாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் இனை செயளாலார் வெளிநாட்டில்  இருப்பதால் இன்றைய வழக்கில் ஆஜராகவில்லை குறித்த இனைச் செயளாலர் பிரதமர் ரனிலின் அலுவலகத்தில் பிரதமரின் அரவனைப்பில் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தார்.


இன்றைய வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் 100 சட்டத்தரணிகள் ஆஜரான அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த முன்னாள் அமைச்சர்கள் குமார் வெல்கம , மஹிந்தானந்த அலுத்கமகே, உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த அதேவேளை நீதிமன்ற வளாகத்தில் கடும் நெரிசல் காணப்பட்டது. 

அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் காரணமாக அரசாங்கத்திற்கு 11.7 billion  ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கோத்தாவுக்காக இன்றைய வழக்கில் 100 கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆஜர்... கோத்தாவுக்காக இன்றைய வழக்கில் 100 கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆஜர்... Reviewed by Madawala News on 9/30/2016 09:28:00 PM Rating: 5