Saturday, September 10, 2016

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான உலகளாவிய சதியே நியுயோர்க் மற்றும் வாஷிங்டனில் இடம்பெற்ற செப்டம்பர் 11 அனர்த்தங்கள்..

Published by Madawala News on Saturday, September 10, 2016  | 


2001 செப்டம்பர் 11 அனர்த்தம் இடம்பெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. நியுயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக கட்டிடத்தின் மீதும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதல் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்திலேயே அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (ஜுனியர்-மகன்) அல்குவைதா அமைப்பின் மீது குற்றம் சாட்டினார். உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும் மத்திய கிழக்கை ஒரு கொலை களமாக்கி ஒன்றுக்கும் உதவாத வெற்று பூமியாக மாற்றுவதற்கும் மிக வசதியான ஒரு பிரசார தளமாக இந்தத் தாக்குதலை அவர் பயன்படுத்தினார். 1989ல் முன்னாள் சோவியத் ரஷ்யா சிதைவடைந்ததோடு அதனுடனான பனிப்போரும் முடிவுக்கு வந்த நிலையில் செப்டம்பர் 11 தாக்குதலை புஷ் ஒரு மாற்று வழியாக பயன்படுத்தினார். இதில் அதுவரை மோதிக் கொண்டிருந்த சிவப்பு கம்யூனிஸ்ட்டுகளுக்கு பதிலாக புஷ் மாற்றீடாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தெரிவு செய்தார். மத்திய கிழக்கை சூறையாடிக் கொண்டிருந்த கூட்டாண்மை குழுமங்களுக்கு உதவும் வகையில் யுத்தங்களை மூட்டி விடுவதூன் அவரின் நோக்கம்.

இந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக புஷ் தனது தந்தை புஷ்ஷின் வழியைப் பின்பற்றி நாடுகளை அச்சுறுத்தினார். அவ்வாறு அச்சுறுத்தி 27 நாடுகளை அடிபணிய வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஆப்னாகிஸ்தான் மீது ஆக்கிரமிப்புச் செய்தார். புஷ்ஷின் இந்த நாசகார ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தான் மக்களை இன்று வரை அடுத்த வேளை உணவுக்காக திக்குத் தெரியாமல் அலைய விட்டுள்ளது.
மேலைத்தேச ஊடகங்களின் கருத்துப்படி செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற ஒரு வருடத்துக்கு முன்பே கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு விஷேட படைகளை அனுப்புவதற்கான தெளிவான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அல்குவைதாவை அழித்து ஒசாமா பின் லாடனை கைது செய்வதுதான் இதன் நோக்கம். புஷ் பதவிக்கு வந்த பின் நீண்ட கொள்கை மீளாய்வுக்குப் பின் செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற ஒரு வாரத்துக்கு முன்பு தான் இந்தத் திட்டத்தை நடைமுறை படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
மிகவும் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிடக் கூடிய அமெரிக்காவின் அட்லான்டா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் சின்தியா மிக்கனி தெரிவித்துள்ள கருத்துக்களின் படி செப்டம்பர் 11 தாக்குதல் பற்றி புஷ் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்.

இந்த இடத்தில் இருந்து தான் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்டிருந்த நடவடிக்கைகள் தொடங்கின. மனித வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் முஸ்லிம்களை அவலத்துக்கு ஆளாக்கி அவர்களின் மனித பண்புகளையே சிதைக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக மறந்து போயிருந்த பிரச்சினைகள் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தோண்டி எடுத்து அவற்றின் அடிப்படையில் அவர்களை மோத விட்டனர். செச்னியா, பொஸ்னியா, கொசோவோ, சோமாலியா,அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, இப்போது யெமன், சிரியா என வரிசையாக பிரச்சினைகள் வளர்ந்தன. இவற்றின் நடுவே முடிவில்லாத இஸ்ரேல் பலஸ்தீன்; காஷ்மீர் போன்ற முஸ்லிம்களின் சுதந்திர போரட்ட பிரச்சினையும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

ஏவ்வாறாயினும்; தங்களால் தங்களது சொந்த நலன் கருதி வடிவமைக்கப்பட்ட திட்டத்தை மத்திய கிழக்கில் அமுல் செய்வதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அரங்கேற்றிய நாடகம் தான் செப்டம்பர் 11 தாக்குதல் என்பதை உலகம் உணாந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை. செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் அதனோடு இணைந்த சதித்திட்டம் என்பன அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய நாடகம் என்பதை நிரூபிக்கும் ஆதாரபூர்வமான பல சான்றுகள் அடுத்தடுத்து உலக அரங்கில் வெளிவரத் தொடங்கின.

அகண்ட அல்லது பரந்து விரிந்த இஸ்ரேலை உருவாக்குவதற்காக மத்திய கிழக்கை அழிப்பதுதான் இஸ்ரேலின் பிரதான குறிக்கோள். சிரியா, ஈராக், எகிப்து ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இஸ்ரேலை விரிவு படுத்துவதுதான் அகண்ட இஸ்ரேல் திட்டம். அமெரிக்காவில் அரசுகளை உருவாக்குகின்றவர்களும் முடிவுக்கு கொண்டுவருபவர்களும் யூதர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புக்கள். யுத்தங்;கள் மூலம் தமது ஆயுத உற்பத்தி கம்பனிகள், எண்ணெய் கம்பனிகள், நிதி கம்பனிகள், மற்றும் தொழில்துறைகள் வளம் பெறவும் மத்திய கிழக்கின் வளங்களை சூறையாடி அவை செல்வம் ஈட்ட வழிவகுப்பதும் தான் இந்த சதித்திட்டங்களின் பின்னணி நோக்கம்.

செப்டம்பர் 11 தாக்குதல் பற்றி தீவிரமாக ஆராய்ந்த கலாநிதி ஜேம்ஸ் பெட்ஸர் 'செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்க சி.ஐ.ஏயின் திட்டமிடல். அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திலும் இஸ்ரேலின் உளவு பிரிவான மொஸாட்டிலும் உள்ள நவ காலணித்துவவாதிகள் தான் இதை திட்டமிட்டனர். ஓஸாமாவுக்கோ அல்லது குறிப்பிட்ட தினத்தில் விமானங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களது சகாக்கள் எனக் கூறப்படுபவர்களுக்கோ இந்தச் சம்பவத்தோடு எந்தத் தொடர்புகளும் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
2006 பெப்பரவரியில் அமெரிக்க காங்கிரஸ் விசாரணை ஒன்றின் போது பென்டகன் நான்கு வருட கால யுத்தத்துக்கான ஒரு முன்னோட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அமெரிக்க இராணுவ அகடமி சமர்ப்பித்த இன்னொரு அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடையிலான யுத்தங்கள் மூட்டி வைக்கப்படவேண்டியதன் அவசியம் தெளிவு படுத்தப்பட்டள்ளது. இந்தப் பயங்கரமான அறிக்கைகள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புஷ்ஷினதும் அவரது நவ காலணித்துவ சகாக்களினதும் திட்டங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக மேலைத்தேச ஊடகங்கள் இவற்றை மூடி மறைத்து விட்டன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செப்டம்பர் 11 தாக்குதலின் பின் புஷ் கட்டவிழ்த்து விட்ட யுத்தம் மிகவும் விரிவானது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் அரசியல், இராணுவ, பொருளாதார, நிதி, சமய, சமூக, கலாசாரம் என எல்லா பிரிவுகளினதும் நுணிவேர் வரை சென்று அது தாக்கத்தை ஏற்படுத்தியது.
செப்டம்பர் 11 தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்கா கையாண்ட கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டது என்று சொல்வதை அல்லது எண்ணுவதை கூட ஒரு பயங்கரவாத செயல் அதுவும் ஒரு தேசத் துரோக குற்றம் எனக் கருதும் அளவுக்கு மோசமான அச்ச நிலை அமெரிக்காவால் தோற்றுவிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த நாடுகளின் நிலையை தனக்கு சாதகமாக்கி ஏற்கனவே வடிவமைத்து வைத்திருந்த தனது திட்டத்தின் பிரகாரம் மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து தனக்குத் தேவையான பொம்மை ஆட்சிகளை நிறுவ புஷ் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அகண்ட இஸ்ரேலை அமைப்பதற்கான தனது திட்டத்தை அமுல் செய்யக் கூடிய ஆட்சியாளர்களை அவர் மத்திய கிழக்கில் உருவாக்கினார்.

இவ்வாறு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி தனிநபர்கள், இஸ்லாமிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள், சமயப் பாடசாலைகள் என முஸ்லிம்களோடும் அவர்களின் அன்றாட வாழ்வியலோடும் சம்பந்தப்பட்ட எல்லாமே சந்தேகப் பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டன. வெறுப்புடன் நோக்கப்பட்டன. இந்த இஸ்லாமிய நிறுவனங்களை ஒழித்துவிட வேண்டும் என்ற குரல் புஷ்ஷுக்கு கீழ்படிவான யூத ஆதரவு ஊடகங்கள் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புக்களுக்கு இது புத்துயிர் அளித்தது.

இதன் விளைவாக இன்று தாடி வைத்துள்ள முஸ்லிம் ஆண்களும், தலைக்கு முக்காடு இடும் முஸ்லிம் பெண்களும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டனர். முஸ்லிம் பிரபலங்களையும் இது விட்டு வைக்கவில்லை. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம்கள் விமானங்களில் இருந்து இறக்கப்படும் அவல நிலை ஏற்பட்டது. எல்லா முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற ஒரு வகை மாயை உருவாக்கப்பட்டது. இந்த மாயையின் அடிப்படையில் விசாரணைகள் எதுவும் இன்றி பெறுமதி மிக்க முஸ்லிம் உயிர்கள் பலவும் அநியாயமாகப் பறிக்கப்பட்டன.
உலக அரசியல் நிலைமைகளைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசுகள் பல அச்சுறுத்தப்பட்டன. இஸ்லாமிய அமைப்புக்கள் பலவற்றின் செயற்பாடுகள் பற்றிய விவரங்களைத் தருமாறு அவை வலியுறுத்தப்பட்டன. அல்குவைதாவுடன் இந்த நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் இருக்கின்ற தொடர்புகள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்ற போர்வையில் இந்த விவரங்கள் திரட்டப்பட்டன. ஏல்லா முஸ்லிம் அமைப்புக்களையும் பற்றிய விவரங்கள், மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் பல்கலைக்கழகங்களின் பாடவிதானங்கள் உட்பட தங்களிடம் இருந்த பல தகவல்களை அப்படியே அமெரிக்காவிடம் முஸ்லிம் நாடுகள் கையளித்தன. ஓவ்வொரு நாடுகளிலும் இஸ்லாமிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை அமெரிக்கா மிக இலகுவாக இவ்வாறு திரட்டிக் கொண்டது. இந்த நாடுகள் தங்களது சுய கௌரவம், பாதுகாப்பு, நலன் என எதையுமே கருத்திற் கொள்ளாமல் வெறுமனெ தங்களது இருப்பை மட்டும் கருத்திற் கொண்டு தங்களிடம் இருந்த எல்லா தகவல்களையும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமெரிக்காவுக்கு தாரைவார்த்தன.

முன் கூட்டியே திட்டமிட்டபடி மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட முஸ்லிம்களை உருவாக்கும் வகையில் இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் உலகளாவிய சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக முஸ்லிம் நாடுகளின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் மாற்றங்களை கொண்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. உலகின் ஒரேயொரு வல்லரசாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து சர்வாதிகார முஸ்லிம் ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா எதிர்ப்பாhத்ததிலும் பாhக்க விரைவாகவும் கீழ்படிவாகவும் நடந்து கொண்டனர். பாகிஸ்தான் கூட இந்த கல்வி முறை மாற்றங்களை கொண்டு வந்தமைக்காக அமெரிக்காவால் பாரிய நிதி உதவி வழங்கி கௌரவிக்ப்பட்டது.
இந்த மாற்றங்களில் மிகவும் வெற்கக் கேடான நிலை சவூதி அரேபியாவும் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய, இஸ்ரேல் கூட்டணியில் பிரிக்க முடியாத அங்கமாக மாறியமையாகும். யெமனில் சவூதி அரேபியா தலைமையிலான தாக்குதல், எகிப்தில் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக இராணுவ சர்வாதிகாரனை ஆட்சியில் அமர்த்தியமை என்பனவற்றில் இந்த நாடுகளின் பங்களிப்ப கணிசமாகக் காணப்படுகின்றன.

இந்தப் பிரசாரத்தின் கீழ் ஒவ்வொரு முஸ்லிம் சமய பாடசாலையும் மிக நுணுக்கமான கண்கானிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சமயப் பாடசாலைகளும் நெருக்குதலுக்கு ஆளாயின. இந்த நெருக்குதலின் முன்னே தாக்கு பிடிக்க முடியாத உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பாடசாலைகள் பல மூடப்படும் நிலைக்கு அல்லது அதன் மாணவர்கள் மற்றும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவற்றுள் பல முஸ்லிம் பாடசாலைகள் சமூக தனவந்தர்களின் நிதி உதவிகளின் கீழ் நடத்தப்பட்டு வந்தவை. இந்த தனவந்தர்கள் தங்களது உதவிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நாடுகள் அவர்கள் மீது நெருக்குதல்களைப் பிரயோகித்தன.
உலகில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம் என்பதால் அதன் பரவல் வேகத்தை தடுப்பதற்காக பயங்கரவாதம் மிகவும் சௌகரியமான ஒரு துரும்பாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இந்த ஒட்டுமொத்த தீய பிரசாரம் உலகை இஸ்லாத்துக்கு எதிராக வெற்றிகரமாகத் திசை திருப்பியது. சமாதானம் என்ற பொருள் கொண்ட இஸ்லாம் என்ற நியாயமான சொல் அதன் பொருளையே சிதைக்கும் வண்ணம் மேற்குலக ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டது. இன்று இஸ்லாம் என்ற சொல் பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுன்னிகள், ஷீஆக்கள், குர்திஷ்கள் என ஒருவரோடு ஒருவர் மோத விடப்பட்டு இந்த வார்த்தைகளுக்காகவே சிவில் யுத்தங்கள் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள் அகதிகளாக தமது வீடுகளை விட்டு வெளியேறும் காட்சிகள் தொலைக்காட்சி செய்திகளில் அன்றாட காட்சிகள் ஆக்கப்பட்டன. தமது சொந்த வீடுகளிலும் காணிகளிலும் அதி உயர் வாழ்க்கைத் தரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கேயே கொன்று குவிக்கப்பட்டனர். இன்னும் பலர் வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது சொந்த வீடுகளில் சௌகரியமாக வாழ்ந்தவர்கள் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.

முஸ்லிம் நாடுகள் மீது தொடுக்கப்பட்ட எல்லா யுத்தங்களையும் நியாயப்படுத்தும் ஒரு கண்மூடி சபையாக ஐக்கிய நாடுகள் சபை மாற்றப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபை அதன் மனிதாபிமானத்தில் இன்று தோற்றுப் போய் நிற்கின்றது.

ஏந்த உதவியும் அற்ற முஸ்லிம்கள் செய்வதறியாது உலகம் முழுவதும் திகைத்துப் போய் நின்றனர். மனித வரலாற்றில் இதற்கு முன் ஒரு போதும் இருந்திராத காட்டு மிராண்டித் தனம் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. தங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுகள் இந்த கொடுமைகளுக்கு எதிராக மௌனித்துப் போன நிலையில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க வழியில்லாமல் முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான யுத்த இயந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மேலைத்தேய ஊடகங்கள் மாறின. பொய் புரட்டு வஞ்சகம் கபடத்தனம் என எல்லாவற்றையும் கலந்து மக்களுக்கு அவை வாறி வழங்கின. தங்களது கொடிய நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்தும் பொய்களைத் தவிர வேறு எதையும் அந்த ஊடகங்களால் மக்களுக்கு வழங்க முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன் 'றோட் டு மக்கா' திரைப்படப் புகழ் மொஹமட் அஸாட் இவ்வாறு குறிப்பிட்டார் 'சிலுவை யுத்தக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு மேற்குலக மக்களின் சிந்தனைகளில் முஸ்லிம் உலகுக்கு எதிரான நச்சு விதைகளைத் தூவியுள்ளது. இஸ்லாத்தின் போதனைகள் மற்றும் கருத்துக்கள் என்பன பற்றி வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன'
உலகளாவிய ரீதியில் முஸ்லிம் எதிர்ப்பலைகள் கிளறி விடப்பட்டன. 'இஸ்லாமோபோபியா' என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய வீணான அச்சம் காட்டுத் தீ போல் உலகம் முழுவதும் பரவியது. 'அடுத்த ஹொலோகோஸ்ட் (இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஜெர்மனின் நாசி படைகளால் யூதர்கள் பாரிய அளவில் கொல்லப்பட்டமை) முஸ்லிம்கள் மீது தான்' என்று ஜெர்மனின் டோர்ட்மன்ட் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் வுல்ப்ராம் றிச்டர் அச்சம் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளது. இந்த அச்சம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எந்த நியாயமும் இன்றி இன்னமும் கொல்லப்படுகின்றார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top