Oceas

ரவி உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்ற நோட்டிஸ் !

நிதி அமைச்சர் ரவிகருநானாயக்க,சுங்க திணைக்கள அத்தியட்சகர்,நிதி அமைச்சின் செயளாலர் உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லயன் ப்ரேவரி உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுங்கவரி சலுகையின் காரணமாக ஏற்பட்டுள்ள 600 கோடி வரி வருமான இழப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்பட்டுள்ள வரி சலுகையை ரத்து செய்து அதனால் ஏற்பட்டுள்ள இழப்பை மீள் அறவிட்டு மக்கள் நலனுக்காக பயன்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் பரீசீலனை செய்துள்ள நீதிமன்றம் ஒக்டோபர் 12 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகும் படி நோரிஸ் அனுப்பியுள்ளது.


ரவி உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்ற நோட்டிஸ் ! ரவி உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்ற நோட்டிஸ் ! Reviewed by Madawala News on 9/28/2016 08:33:00 AM Rating: 5