Accaddemy

மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு 1.5 கோடியில் ரஷ்ய சுற்றுலா : நாளை முதல் குழு புறப்படுகிறது...


மத்திய மாகாண சபை உறுபினர்கள் 58 பேர் மற்றும் மாகாண சபை காரியாளய அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு மத்திய மாகாண சபை செலவில் ரஷ்யா செல்லவுள்ளது.

இதில் முதல் குழுவாக நாளை 29 மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு ரஷ்யா நோக்கி புறப்பட உள்ளது.

அங்கு அவர்கள் ரஷ்ய அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ள அதேவேளை அங்குள்ள தொழில் பேட்டை உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட உள்ளனர்.

இந்த சுற்றுலாவுக்காக மத்திய மாகாண சபையினால் 1.5 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் ஹொலிடெ இன் ஹோட்டலில் இந்த குழு தங்கவுள்ளது.

ஒருவருக்கு 120 ஆயிரம் ரூபாவில் விமான பயண சீட்டு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை ஒதுக்கப்பட்டுள்ள நிதி தவிர மேலதிகமாக செல்லும் தொகையை மாகாண சபை உறுப்பினர்களிடன் இருந்து 1500 டொலர் வீதம் பெற்றுகொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு 1.5 கோடியில் ரஷ்ய சுற்றுலா : நாளை முதல் குழு புறப்படுகிறது... மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு 1.5 கோடியில் ரஷ்ய சுற்றுலா : நாளை முதல் குழு புறப்படுகிறது... Reviewed by Madawala News on 9/26/2016 07:08:00 AM Rating: 5