Sunday, September 25, 2016

16 வருடத்திற்கு பிறகு ஒன்­றரை லட்ச ரூபா நஷ்­டஈடு..

Published by Madawala News on Sunday, September 25, 2016  | இரா­ணுவ பவல் வாகனம் ஒன்று  மோதி­யதில் ஹேரத் முதி­யான்­ச­லாகே ஹீன் பண்டா என்ற சிவி­லியன் ஒருவர் மர­ண­மா­கிய சம்­பவம் தொடர்­பான வழக்கில் 16 வரு­டங்­களின் பின்னர் ஒன்­றரை லட்ச ரூபா நஷ்­டஈடு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

திரு­கோ­ண­மலை சிவில் மேன் முறை­யீட்டு மேல் நீதி­மன்­றத்தில் இரண்டு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களைக் கொண்ட நீதி­பதி குழாம் வழங்­கிய தீர்ப்­பை­ய­டுத்து, இந்த நஷ்­டஈட்டுத் தொகையை இரா­ணுவ தள­பதி செலுத்­தி­யுள்ளார்.
திரு­கோ­ண­மலை மேன் முறை­யீட்டு மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட இந்த விபத்து மரண வழக்கில் யாழ் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், பதுளை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­பதி குழாம் இந்தத் தீர்ப்பை வெள்­ளிக்­கி­ழமை வழங்­கி­யுள்­ளது.
திரு­கோ­ண­ம­லையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி இந்த விபத்து சம்­பவம் நடை­பெற்­றது.

இரா­ணுவ பவல் வாக­னத்தை ஓட்­டி­வந்த இரா­ணுவ சார­தியின் கவ­ன­யீ­னத்­தினால் ஹேரத் முதி­யான்­ச­லாகே ஹீன் பண்டா என்­பவர் மர­ண­மா­கி­ய­தாகக் குற்றம் சுமத்தி திருகோ­ண­மலை நீதவான் நீதி­மன்­றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

இந்த வழக்கு விசா­ர­ணையின் முடிவில் உயி­ரி­ழந்­த­வ­ருக்கு மர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக அவ­ரு­டைய மனை­விக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்­டஈடு வழங்க வேண்டும் என நீதவான் நீதி­மன்­றத்தில் தீர்ப்பளிக்­கப்­பட்­டது. ஆயினும் இதனை ஏற்க மறுத்த இறந்­த­வரின் மனைவி திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­மன்­றத்தில் பவல் வாக­னத்தைச் செலுத்தி வந்த இரா­ணுவ சாரதி, இரா­ணுவ தள­பதி, சட்­டமா அதிபர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சிவில் வழக்­கொன்றைப் பதிவு செய்­தி­ருந்தார்.
ஆரம்ப விசா­ர­ணை­களின் பின்னர் இந்த வழக்கு 2008 ஆம் ஆண்டு திரு­கோ­ணலை மேன் முறை­யீட்டு மேல் நீதி­மன்­றத்­திற்குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.
இந்த வாகன விபத்து மரணம் தொடர்பில் நீதி­மன்ற விசா­ர­ணைகள் நடை­பெற்று வந்­த­போது குற்றம் சுமத்­தப்­பட்­ட­வ­ரா­கிய இரா­ணுவ சாரதி மர­ண­ம­டைந்­தி­ருந்தார்.

ஆயினும் திரு­கோ­ண­மலை மேன் முறை­யீட்டு மேல் நீதி­மன்­றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசா­ரணை செய்­யப்­பட்டு வந்­தது. அங்கு இரண்டு நீதி­ப­திகள் அடங்­கிய வெவ்வேறு குழா­மினால் வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. இறு­தி­யாக பிர­தம நீதி­ய­ர­ச­ரினால் விசே­ட­மாக நிய­மனம் செய்­யப்­பட்ட நீதி­ப­தி­க­ளான இளஞ்­செ­ழியன், ஜய­வர்­தன ஆகிய இருவர் அடங்­கிய குழாமின் முன்­னி­லையில் இந்த வழக்கு தொடர்ந்து விசா­ரிக்­கப்­பட்டு வந்­தது.
விபத்து மர­ணத்தில் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட இரா­ணுவ சாரதி உயி­ரோடு இல்­லாத போதிலும், இறந்­த­வரின் மனைவி அவ­ருக்கு அடுத்­த­தாக இரா­ணுவ தள­ப­தி­யையும், அதற்கு அடுத்­த­தாக சட்­ட­டமா அதி­ப­ரையும் எதி­ரி­க­ளாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த நிலையில் உயி­ரி­ழந்­த­வரின் மனை­விக்­கான நஷ்­ட­ஈட்டை இரா­ணுவ தள­ப­தியே வழங்க வேண்டும் என்று நீதி­மன்றம் கூறி­யி­ருந்­தது. இந்த வழக்கை முடி­வுக்குக் கொண்டு வரும் வகையில், இரா­ணுவ தள­பதி இந்த நஷ்­டஈட்டுத் தொகையை வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக இரா­ணுவ தரப்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அரச சட்­டத்­த­ரணி தெரி­வித்­தி­ருந்­தனர்.

அத்­துடன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை, இரா­ணுவ தள­ப­தியின் அந்தத் தொகைக்­கு­ரிய காசோ­லை­யுடன் நீதி­மன்­றத்தில் அரச சட்­டத்­த­ரணி  முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

இந்த நஷ்­ட­ஈட்டுத் தொகையை ஏற்றுக் கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் மரணமடைந்தவரின் மனைவி
தனது சட்டத்தரணியின் மூலம் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நஷ்டஈட்டுத் தொகை யான ஒன்றரை இலட்ச ரூபாவுக்கான காசோலை நீதிமன்றத்தில் வைத்து, அந்தப் பெண்ணிடம் கையளிக்கப்பட்டு 16 வருடங் களாகத் தொடர்ந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top