Oceas

தீவிரவாத தொடர்புடையவர்கள் 17 பேர் சவூதி பொலிசாரால் கைது.



கடந்த தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் மற்றும் சவூதி பொதுமக்கள்,  பாதுகாப்பு படை வீரர்கள், அரசாங்க தளங்கள் மீது  எதிர்கால தாக்குதல்களை திட்டமிட்ட  பயங்கரவாத வலையமைப்பு ஒன்றை கைது செய்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

ஒரு சவூதி பெண் உட்பட 11 பேர் சவூதி நாட்டவர்கள் 3 யேமேனி 2 எகிப்து
1 பாலஸ்தீன் நாட்டவர் இவ்வாறு கைதாகி உள்ளதாக  உள்துறை அமைச்சக பேச்சாளர் மேஜர். ஜெனரல் மன்சூர் அல் துர்க்கி நேற்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத நெட்வேர்க்   தற்கொலை உள்ளாடைகள், தற்காலிக வெடி பொருட்கள்  தயாரித்தது, சவூதி மீதான  பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தளவாடங்கள், நிதி, ஆயுத மற்றும் போக்குவரத்து உதவி  வழங்குவதில் ஈடுபட்டவர்கள்  என அவர் மேலும் தெரிவித்தார்.
தீவிரவாத தொடர்புடையவர்கள் 17 பேர் சவூதி பொலிசாரால் கைது. தீவிரவாத தொடர்புடையவர்கள் 17 பேர் சவூதி பொலிசாரால் கைது. Reviewed by Madawala News on 9/20/2016 10:20:00 AM Rating: 5