Accaddemy

18 இலட்சம் பேர் அரபாத் குன்றில் இடம்­பெற்ற வணக்கங்களில் பங்கேற்பு.



வரு­டாந்த ஹஜ் யாத்­தி­ரையின் முக்­கிய கட்­ட­மாக சுமார் 1.8 மில்­லியன் மக்கள் அரபாத் குன்றில் ஏறினர்.

அவர்கள் அந்த குன்றில் நாள் முழு­வ­து­மான தொழு­கையில் ஈடு­பட்­டனர். மேற்­படி குன்று புனித ஸ்தல­மான மக்­கா­வி­லி­ருந்து 15 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்­ளது.

அந்தக் குன்­றி­லேயே இறை­தூதர் தனது இறுதி உரையை ஆற்­றி­ய­தாக முஸ்­லிம்கள் நம்­பு­கின்­றனர்.

ஹஜ் யாத்­திரை இஸ்­லாத்தின் 5 தூண்­க ளில் ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கி­றது. அதனால் அனைத்து முஸ்­லிம்­களும் அந்த யாத்­தி­ரையை ஒரு தட­வை­யா­வது மேற்­கொள்ள வேண்டும் எனக் கோரப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அந்­நாட்டின் உயர்­மட்ட மத­கு­ரு­வான அப்துல் அஸீஸ் அல் –ஷெய்க் உடல் நலப் பிரச்­சினை கார­ண­மாக பாரம்­ப­ரிய ஹஜ் உரையை கடந்த 35 வரு­டங்­களில் முதல் தட­வை­யாக இந்தத் தடவை ஆற்ற மாட்டார் என கடந்த சனிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஈரா­னி­யர்கள் முஸ்­லிம்கள் அல்லர் என்ற அவ­ரது சர்ச்­சைக்­கு­ரிய விமர்­ச­னத்­தை­ய­டுத்தே இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

ஈரா­னா­னது இந்த வருட ஹஜ் யாத்­தி­ரையை பகிஷ்­க­ரிப்புச் செய்­துள்­ளது. அதே­ச­மயம் அந்­நாடு ஈராக்­கிய கர்­பலா நகரில் ஹஜ் யாத்­தி­ரைக்கு மாற்­றீ­டாக பிறி­தொரு நிகழ்வை கடந்த சனிக்­கி­ழமை நடத்­தி­யது.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்­தி­ரையின் போது 464 ஈரா­னி­யர்கள் உட்­பட குறைந் தது 2,426 பேர் சனநெரிசலில் சிக்கி பலி யானதையடுத்து இரு நாடுகளுக்கு மிடை யிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 இலட்சம் பேர் அரபாத் குன்றில் இடம்­பெற்ற வணக்கங்களில் பங்கேற்பு. 18 இலட்சம் பேர் அரபாத் குன்றில் இடம்­பெற்ற வணக்கங்களில் பங்கேற்பு. Reviewed by Madawala News on 9/13/2016 10:35:00 AM Rating: 5