காத்தான்குடியில் கட்டப்பட்டு வரும் ஒரு பள்ளிவாயலின் நிதித் தேவைக்கு 19 மாணவர்கள் தமது ஒரு கிட்னியை அன்பளிப்பு செய்ய முன் வந்துள்ள சம்பவம்.



காத்தான்குடியில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாயல் ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக மாணவர்கள் சிலர்  தமது கிட்னியை வழங்க முன்வந்துள்ளார்கள் என்ற செய்தி சமூக வலைகளில் இன்று விவாதிக்கபட்டு வருகிறது.. இது தொடர்பில் விசாரித்து பார்த்த போது, குறிப்பிட்ட சூபிஷ சுன்னத் வல் ஜமாத்தின் இணையத்தில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. அது ( மாற்றங்கள் இன்றி ) உங்கள் பார்வைக்கும்..


19 பேர் தமது கிட்னி  –  சிறு நீரகத்தை தியாகம் செய்யத் தயார்!!! ஞானபிதா அவர்களுக்கு ஆதவாளர்கள் உத்தியோகபூர்வ கடிதம்.

காத்தான்குடியில் நவீன அமைப்பில் கட்டப்பட்டு வரும் பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்காக ஸூபிஸ சமுகத்தின் தலைவர் ஞானபிதா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் ஆன்மீக மாணவர், மாணவியர்களிற் பலர் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கி வருகின்றார்கள்.

இவர்களில் ஒன்பது ஆண்களும், பத்து பெண்களும் தமது கிட்னி  – சிறுநீரகத்தில் – ஒன்றை பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள்.

இது தொடர்பாக இவர்கள் தமது பெயர், முகவரியுடனான கடிதம் ஒன்றையும் மிஸ்பாஹி அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.

மிஸ்பாஹீ அவர்கள் இக்கடிதத்தின் படி செயலாற்றுவதா? இல்லையா? என்பது பற்றி இன்னும் தனது முடிவைத் தெரிவிக்கவில்லை.

செயலர்
– பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் –
காத்தான்குடி-05

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள அச்செய்தியில் சிறுநீரகத்தில் – ஒன்றை பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ள மாணவ, மாணவிகளின் பெயர்களும் வெளியாகியுள்ளன.


காத்தான்குடியில் கட்டப்பட்டு வரும் ஒரு பள்ளிவாயலின் நிதித் தேவைக்கு 19 மாணவர்கள் தமது ஒரு கிட்னியை அன்பளிப்பு செய்ய முன் வந்துள்ள சம்பவம். காத்தான்குடியில் கட்டப்பட்டு வரும் ஒரு பள்ளிவாயலின் நிதித் தேவைக்கு 19 மாணவர்கள் தமது ஒரு கிட்னியை அன்பளிப்பு செய்ய முன் வந்துள்ள சம்பவம். Reviewed by Madawala News on 9/22/2016 04:37:00 PM Rating: 5