இரு அதிபர்கள் உற்பட 20 போலி ஆசிரியர்கள் பணி நீக்கம்..!


வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்வி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர்  தெரிவித்துள்ளார்.

சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடைமுறை இடம்பெறும். இதற்காக அவர்களின் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படும் போதே 20 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடி செய்தமை கண்டறியப்பட்டது.

இதில் இருவர் அதிபராகவும் தேர்வாகியிருந்தனர். 20 பேரில் ஆசிரியைகளும் உள்ளடங்குகின்றனர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகள் அனைத்தும் மீளச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இரு அதிபர்கள் உற்பட 20 போலி ஆசிரியர்கள் பணி நீக்கம்..! இரு அதிபர்கள் உற்பட 20 போலி ஆசிரியர்கள் பணி நீக்கம்..! Reviewed by Madawala News on 9/11/2016 09:21:00 AM Rating: 5