கொத்மலை பிரதேச சபையினர் குர்பான் மாடு அறுப்புக்காக 2000 ரூபா அறவிட்டு அட்டகாசம். ( உரிய கட்டணத் தொகை 25 ரூபா)



உல்ஹிய்யா மாடறுப்புக்காக அறவிடப்ப வேண்டிய தொகையைக் குறைக்கும் படியும் ( மாடறப்புக்காக செலுத்த வேண்டிய உரிய கட்டணத் தொகை  25 ரூபாவாகும். மன நியதிப்படி 300, 350 வழங்கப்பட்டு வருகிறது)

நியாயமற்ற முறையில் கட்டணத்தை அதிரிக்க வேண்டாம். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் உயர் அதிகாரி மிகவும் கட்டாகத் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபையினர் குர்பான் மாடு அறுப்புக்காக 2000 ரூபா அறவிடுவதாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை  அமைச்சுக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரதேச சபையின் உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு மாடறப்புக்காக பணம் அறவிடுது தொடர்பாக இன்று கட்டமாக இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
உள்ளுராட்சி மன்றம் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன.

அப்போழுது சபையில் கொண்டு வரப்பட்ட சட்ட திட்டத்தை இப்போழுது நடைமுறைப்படுத்த முடியாது.

 அவ்வாறு அந்தச் சட்டம் இருந்தாலும் எக்காரணம் மாடு மாடறப்புக்காக 2000 ரூபா அறவிட முடியாது. நியாயமற்ற வேலைகளைச் செய்ய வேண்டாம்.

 இது தொடர்பாக ஆணையாளருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலியார் 


கொத்மலை பிரதேச சபையினர் குர்பான் மாடு அறுப்புக்காக 2000 ரூபா அறவிட்டு அட்டகாசம். ( உரிய கட்டணத் தொகை 25 ரூபா) கொத்மலை பிரதேச சபையினர்  குர்பான் மாடு அறுப்புக்காக 2000 ரூபா அறவிட்டு அட்டகாசம். ( உரிய கட்டணத் தொகை  25 ரூபா) Reviewed by Madawala News on 9/08/2016 09:11:00 AM Rating: 5