Free Space

இலங்கையை வாட்டும் எயிட்ஸ்.. 2436 பேர் நோய் தோற்று.. 394 பேர் மரணம்.



நாட­ளாவிய ரீதியில் 2 ஆயி­ரத்து 436 பேர் எச்.ஐ.வி.தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­வித்த சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன .

இதுவரை 394பேர் மர­ண­டைந்­த­தற்­கான பதி­வுகள் உள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்­வி­நே­ரத்­தின்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தற்­போது இலங்­கையில் எச்.ஐ.வி. தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்ள ஆட்­களின் எண்­ணிக்கை எத்­தனை? இவர்­களில் எயிட்ஸ் நோயா­ளர்கள் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­வர்கள் எண்­ணிக்கை எத்­தனை?, கடந்த ஐந்து வரு­டங்­களில் மர­ணித்த ஆட்­களின் எண்­ணிக்கை எவ்­வ­ளவு? இதுரை வரையில் மர­ணித்­துள்­ள­வர்­களின் மொத்த எண்­ணிக்கை எத்­தனை? பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் ஆயுட் காலத்தை அதி­க­ரிப்­ப­தற்கு எடுத்­துள்ள நட­வ­டிக்கை எவ்­வ­ளவு? எச்.ஐ.வி.யை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன? என புத்­திக பதி­ரண கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் தெரி­விக்­கையில்,

நாடா­ள­விய ரீதியில் 631 பேர் எயிட்ஸ் நோயா­ளர்­க­ளென அடை­யாளங் காணப்­பட்­டுள்­ளனர்.

இது­வ­ரையில் 394 பேர் மர­ணித்­துள்­ளனர். 2011 ஆம் ஆண்டில் 32 பேரும், 2013 இல் 30 பேரும், 2013 இல் 27 பேரும், 2014 இல் 26 பேரும் 2015 இல் 31 பேரும் எயிட்ஸ் நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

எச்.ஐ.வி. தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்ள ஆட்­களின் ஆயுட் காலத்தை அதி­க­ரிக்­கச்­செய்­வ­தற்கு மருத்­துவ மட்­டத்தில் அர­சா­ங்கம் பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

எச்.ஐ.வி. பர­வு­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு மாண­வர்கள் சேர்க்­கப்­ப­டும்­போதும் அரச சேவை க்கு ஊழி­யர்­களை இணைத்­துக்­கொள்­ளும்­போதும் எச்.ஐ.வி. சோதனை நடத்­து­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­ளது.

இதே­போன்று தான் சிறைச்­சா­லை­களில் தண்­டனை பெற்ற கைதிகள், கர்ப்பி­ணிமார்கள் ஆகி­யோ­ரையும் பரி­சோ­தனை செய்யும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

 விழிப்புணர்வு அற்ற செயற்பாடுகளும் முன்னெடுக் கப்படுகின்றன. எவ்வாறாயினும் தெற் காசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண் ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்றார்.

இலங்கையை வாட்டும் எயிட்ஸ்.. 2436 பேர் நோய் தோற்று.. 394 பேர் மரணம். இலங்கையை வாட்டும் எயிட்ஸ்.. 2436 பேர் நோய் தோற்று.. 394 பேர் மரணம். Reviewed by Madawala News on 9/22/2016 10:02:00 AM Rating: 5