சாகிர் (வயது 26) பொல்லால் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஒரு தாய் மற்றும் மகனுக்கு ( லத்தும்மா, முகம்மது பைசால்) மரண தண்டனை தீர்ப்பு.



அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஒலுவில் பிர­தே­சத்தில் ஒரு­வரை பொல்லால் அடித்து கொலை செய்­த­தாக குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட 3 நபர்­க­ளுக்கு கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரட்­ண­மா­ற­சிங்க வியா­ழக்­கி­ழமை மர­ண­தண்­ட­னை­வ­ழங்கி தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகன்மாருக்குமே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2004.05.26ஆம் திக­தி­யன்று ஒலுவில் 01ம் பிரிவில் இடம்­பெற்ற கைக­லப்­பை­ய­டுத்து 3 பேர் பொல்லால் அடித்து மர­ணத்தை ஏற்­ப­டுத்­தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மீது அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ரினால் அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீத­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ரணை இடம்­பெற்று வந்­தது.

இவ்­வ­ழக்கு மேல­திக விசா­ர­ணைக்­காக சட்ட மா அதி­ப­ரினால் சந்­தேக நபர்கள் மீது கல்­முனை மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.
இவ் வழக்கு விசா­ரணை கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி பி. சந்­திரசிங்க முன்­னி­லையில் 2010.07.20ஆம் திகதி எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது குறித்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தி­ருந்தார்.


குற்­ற­வா­ளிகள் இம் மர­ண­தண்­ட­னையை இரத்துச் செய்­யு­மாறு கோரி உயர் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­தனர். இதனை ஆராய்ந்த உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள் இத் தீர்ப்பில் சிறு பிழைகள் காணப்­ப­டு­வ­தா­கவும், இப் பிழை­களைத் திருத்தி மீண்டும் விசா­ரணை மேற்­கொண்டு தீர்ப்பு வழங்­கு­மாறு கல்­முனை மேல் நீத­மன்­றத்­திற்கு கட்­டளைப் பிரப்­பித்­தி­ருந்­தது.

இதை­ய­டுத்து கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரட்ண மாற­சிங்க இவ் வழக்­கினை மீண்டும் விசா­ரணை செய்து குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­காணப்­பட்ட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த தாய் உட்­பட 2 ஆண் பிள்­ளை­க­ளுக்கும் வியா­ழக்­கி­ழமை மரண தண்­டணை வழங்கி தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

இறந்­தவர் ஒலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த சரிபுத்தம்பி முகம்மது சாகிர் (வயது -26) என்பவராவார்.

யு.எல். செமி லத்தும்மா, ஏ.எல். முகம்மது பைசால், ஏ.எல். இக்பால் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
சாகிர் (வயது 26) பொல்லால் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஒரு தாய் மற்றும் மகனுக்கு ( லத்தும்மா, முகம்மது பைசால்) மரண தண்டனை தீர்ப்பு. சாகிர் (வயது 26) பொல்லால் அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஒரு தாய் மற்றும் மகனுக்கு ( லத்தும்மா, முகம்மது பைசால்) மரண தண்டனை தீர்ப்பு. Reviewed by Madawala News on 9/30/2016 02:19:00 PM Rating: 5