Free Space

வடக்கு முஸ்லிம்கள் ஜெனீவா செல்கின்றனர் ! 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆணையாளர் ஹுஸைனை சந்திக்க ஏற்பாடு...

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் பல­வந்­த­மாக வெளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக சிவில் பிர­தி­நி­திகள் குழு­வொன்று ஜெனீவா செல்­ல­வுள்­ள­தாக யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் சர்­வ­தேச அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் 27 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீ­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்குச் செல்லும் வடக்கு மாகாண முஸ்­லிம்கள் அங்கு ஐ.நா. அதி­கா­ரிகள், சர்­வ­தேசப் பிர­தி­நி­திகள், மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் பிர­தி­நி­திகள், அரபு மற்று முஸ்லிம் பிர­தி­நி­திகள் மற்றும் வெளி­நாட்டுத் தூது­வர்­களை சந்­திக்­க­வுள்­ளனர்.

இதற்­கான அனு­மதி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வி­ட­மி­ருந்து கிடைந்­துள்­ளது என அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 

இது தொடர்பில் மேலும் தெரி­யவருவதாவது, குறித்த சந்­திப்­பு­க­ளுக்­காக ஜெனீவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் தனி அறை ஒன்றும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண முஸ்­லிம்­களின் சார்பில் சுமார் 30 பேர­டங்­கிய குழு­வொன்று கலந்­து­கொள்­ள­வுள்­ளது. லண்டன், பிரான்ஸ், ஜேர்­மனி, நோர்வே, சுவீடன், இத்­தாலி மற்றும் சுவிஸ் நாடு­களில் வாழ்­கின்ற யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் பிர­தி­நி­திகள் இதில் பங்­கேற்­க­வுள்­ளனர்.

தமது பூர்­வீக தாய­கத்தில் மீள்­கு­டி­யேற்றம், அதற்­காக தமக்­குள்ள தார்­மீக உரிமை, மீள்­கு­டி­யேற்­றத்தில் உள்ள தடைகள், தடை ஏற்­ப­டுத்தும் சக்­திகள் உள்­ளிட்ட பல்­வேறு விளக்­கங்­களை யாழ்ப்­பாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் இதன்­போது தெளி­வு­ப­டுத்­து­வார்கள்.
யாழ்ப்­பாண முஸ்­லிம்­களின் மொழி­யாற்றல் மிக்க உயர் கல்வி கற்கும் பிள்­ளை­களும் இதில் பங்­கு­கொள்­ள­வுள்­ளனர்.

அத்­துடன் இந்த நிகழ்வில் யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு, அவர்­களின் தற்­போதைய நில­வரம் அடங்கிய  வீடியோ ஒன்றும் காண்பிக்கப்படவுள்ளதுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ஹுசைனிடம் மகஜரொன்றும் கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லிம்கள் ஜெனீவா செல்கின்றனர் ! 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆணையாளர் ஹுஸைனை சந்திக்க ஏற்பாடு... வடக்கு முஸ்லிம்கள் ஜெனீவா செல்கின்றனர் !  27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆணையாளர் ஹுஸைனை சந்திக்க ஏற்பாடு... Reviewed by Madawala News on 9/22/2016 12:45:00 PM Rating: 5