Free Space

நுவன் குலசேகரவின் கார் மோதி 28 வயது இளைஞன் உயிரிழந்தது எப்படி?



இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவுக்கு பொலிஸ் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுவன் குலசேகர செலுத்திய வாகனம் இன்று மாலை கடவத்தை, கிரில்லவெல பகுதியில் விபத்துக்குள்ளானதில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ ஸ்தலத்தில் வைத்து நுவன் குலசேகர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்பின்னரே நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,

விபத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடைய நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவராவார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பாதையிலுள்ள சீமெந்து தூண் ஒன்றில் மோதியுள்ளது. இதனால், இவர்  நடுப்பாதைக்கு தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பின்னால் வேகமாக வந்த குலசேகரவின் கார், குறித்த இளைஞனின் மீது ஏறியதனாலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். D C
நுவன் குலசேகரவின் கார் மோதி 28 வயது இளைஞன் உயிரிழந்தது எப்படி?  நுவன் குலசேகரவின் கார் மோதி 28 வயது இளைஞன் உயிரிழந்தது எப்படி? Reviewed by Madawala News on 9/19/2016 11:14:00 PM Rating: 5