போயா தினத்தில் 300 கிலோ இறைச்சி கடத்தியவர்கள் சிக்கினர்.



மீன் ஏற்றிச் செல்லும் குளிரூட்டப்பட்ட லொறியில் மிஹிந்தலையிலிருந்து நீர்கொழும்பு பிரதேசத்துக்கு ஆட்டு இறைச்சி 300 கிலோ ஏற்றிச் சென்றவர்களை இன்று மஹவெவ நகரில் வைத்து மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த  இறைச்சி, நீர்கொழும்பிலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டவை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். D C
போயா தினத்தில் 300 கிலோ இறைச்சி கடத்தியவர்கள் சிக்கினர். போயா தினத்தில்  300 கிலோ இறைச்சி கடத்தியவர்கள் சிக்கினர். Reviewed by Madawala News on 9/16/2016 07:44:00 PM Rating: 5