Free Space

தஹம் சிரிசேனவின் 328 500 ரூபா HERMES பிராண்டட் பெல்ட் ! சமூக வலைகளில் வைரலாகும் புகைப்படம்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்கள் லுவி விட்டோன் காலணி அணிந்ததாக அப்போது  கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை நாம் அறிந்ததே,

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்ரியின் புதல்வர் தஹம் சிரிசேன அணியும் பெல்ட் தொடர்பில் முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிரிசேனவின் புதல்வரின் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட தஹம் சிரிசேன HERMES பிராண்டட் பெல்ட் அணிந்திருந்தார்.

குறித்த பெல்ட் 2250 டொலர்கள் அதாவது இலங்கை ரூபாய்களில் 328500 என சுட்டிக்காட்டப்பட்டு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

நாம் HERMES பிராண்ட் பெல்ட் விலை தொடர்பில் இணையத்தில் தேடிய போது அவை 950 டொலர்களில் (இலங்கை ரூபாய்களில் சுமார் ஒன்றரை லட்சத்தில்) இருந்து  கிடைக்கின்றமையை அவதானிக்க முடிந்தது.
தஹம் சிரிசேனவின் 328 500 ரூபா HERMES பிராண்டட் பெல்ட் ! சமூக வலைகளில் வைரலாகும் புகைப்படம். தஹம் சிரிசேனவின் 328 500 ரூபா HERMES பிராண்டட் பெல்ட் ! சமூக வலைகளில் வைரலாகும் புகைப்படம். Reviewed by Madawala News on 9/27/2016 02:41:00 PM Rating: 5