Free Space

கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலம் மட்டுமே உள்ளது.


கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலம் மட்டுமே உள்ளது. ஆகவே, கிழக்கு மாகாணத்திலுள்ள நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் முறையாகக் கையாளப்பட்டு தீர்வு காணப்படுவதை கிழக்கு மாகாண சபை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார,வேலைவாய்ப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் அவர்கள் இன்று (22) கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கலப்பதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது, நிலங்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரனை மீது உரையாற்றும் போதே தவம் அவர்கள் மேற்கண்டவாறு உரையாற்றினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

13 ஆவது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பான அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு நமது சபை இன்னும் தயாரில்லை. மாகாண காணி ஆணையாளருக்கான போதிய ஆளணியைக் கூட இன்னும் நம்மால் வழங்க முடியவில்லை. இன்னும் நில அளவையாளர்கள் கூட அவர்களுக்கு போதியளவு இல்லை. அப்படி இருக்கின்ற போது எப்படி நிலங்கள் தொடர்பான விடயங்களைக் கையாள முடியும் எனக் கேட்க விரும்புகிறேன். இந்நிலை திட்டமிட்டு தொடர வைப்பதாக நான் ஐயப்படுகிறேன். ஒரு தமிழரிடமோ அல்லது முஸ்லிடமோ நிலங்களைக் கையாளும் அமைச்சினை வழங்காமல் மத்திய அரசு இதனைக் கச்சிதமாகச் செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது ஜனாதிபதி அவர்கள் தேசிய ரீதியில் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் ஒரு உயர்மட்டக் குழுவினை நியமித்துள்ளார். அக்குழு தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அவ்வாறு அவர்கள் ஆரம்பிக்கின்ற போது, கிழக்கு மாகாணத்திலுள்ள மொத்தமான நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளையும் கையாள நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே, இவை பற்றிய முழுத்தகவல்களையும் நாம் ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென்று நாம் ஒரு தகவல் வங்கியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான விடயங்களில் முஸ்லிம் உறுப்பினர்களே அதிக கவனம் எடுக்க வேண்டும். ஏனெனில், அதிகமான காணி நெருக்கடி முஸ்லிம்களுக்கே ஏற்படப்போகிறது. கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலங்கள் மட்டுமே உள்ளது. ஆகவே, கிழக்கு மாகாணத்திலுள்ள நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் முறையாகக் கையாளப்பட்டு தீர்வு காணப்படுவதை கிழக்கு மாகாண சபை ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கே அதிகம் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

(இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தி - 22.09.2016)
கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலம் மட்டுமே உள்ளது. கிழக்கு மாணத்தில் 39 சதவீதமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வெறும் 8 சதவீதமான நிலம் மட்டுமே உள்ளது. Reviewed by Madawala News on 9/22/2016 10:19:00 PM Rating: 5