Free Space

4161 கோடி ரூபா­வுக்­கான நிதி கோரி குறை­நி­ரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தது அர­சாங்கம்


(ப.பன்­னீர்­செல்வம், ஆர்.ராம்)

அர­சாங்கம் 4161 கோடியே 47 இலட்­சத்து 

23527 ரூபா­வுக்­கான குறை­நி­ரப்பு பிரே­ர­ ணையை சபையில் நேற்று சமர்ப்­பித்­துள்­ ளது. 


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2016 ஆம் ஆண்­டுக்­கான வர­வு,­ செ­ல­வுத்­திட்­டத்தில் ஒதுக்­கப்­பட்ட நிதிக்கு மேல­தி­க­மாக இப்­பி­ரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.


இதில் பாது­காப்பு அமைச்­சுடன் தொடர்­பு­டைய முப்­ப­டை­க­ளுக்கும் 165கோடியே 3067000 ரூபாவும், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு ஒரு­ கோ­டியே 350 000 ரூபாவும் 

ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 


அமைச்­சர்கள், திணைக்­க­ளங்­களின் வாக­ன­கொள்­வ­ன­வுக்­காக 20கோடியே 40இலட்­சத்து 87 750ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக 100கோடி ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 


ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்­காக 32கோடியே 33இலட்­சத்து 320 000 ரூபாவும் பிர­தமர் அலு­வ­ல­கத்­திற்­காக 12கோடியே 36 இலட்­சத்து 27 418 ரூபாவும்   ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிகுதி ஏனைய அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது.

4161 கோடி ரூபா­வுக்­கான நிதி கோரி குறை­நி­ரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தது அர­சாங்கம் 4161 கோடி ரூபா­வுக்­கான நிதி கோரி குறை­நி­ரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தது அர­சாங்கம் Reviewed by Madawala News on 9/10/2016 10:19:00 AM Rating: 5