மகிந்த ஒரு வாக்­குக்­காக 43ஆயிரம் ரூபா செல­வ­ழித்தார். இன்னும் 20 வரு­டங்கள் செல்லும் வரை அவரால் ஆட்சிக்கு வர முடியாது.



(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் ஆட்­சியை மீண்டும் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு வழங்­கு­வ­தற்கு மக்கள் விரும்­ப­மாட்­டார்கள். இன்னும் 20 வரு­டங்கள் செல்லும் வரைக்கும் அவரால் அதி­கா­ரத்­துக்கு வர­மு­டி­யாது என மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

களுத்­து­றையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்சி மாவட்ட சம்­மே­ள­னத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர்­அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி மக்கள் ஆணையின் அடிப்­ப­டை­யிலே அர­சியல் பயணம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதே­போன்று 2020ஆம் ஆண்டு தேசிய தேர்­தல்கள் இரண்டு இடம்­பெற இருக்­கின்­றன.

 2020ஆம் ஆண்டு அல்­லாமல் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு ஒரு­போதும் அதி­கா­ரத்­துக்கு வர முடி­யாது.

அத்­துடன் நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த பயங்­க­ர­வாத யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஜாதிக ஹெல உறு­ம­யதான் முன்­னின்று செயற்­பட்­டது. மாவி­லாறு அணையை திறந்து பயங்­க­ர­வா­தத்தை விரட்­டி­ய­டிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்தோம். நாட்டில் தற்­போது பயங்­க­ர­வாதம் தலை­தூக்கி இருப்­ப­தாக சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

மஹிந்த ராஜ­பக் ஷவின் தேர்தல் வாக்­கு­றுதி பத்­தி­ரத்­தில்­கூட பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்கவில்லை. மாறாக பிர­பா­க­ரனை தோற்­க­டிப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சிலர் பாதை­களில் அமர்ந்­தி­ருந்து உண்­ணா­வி­ரதம் மேற்­கொண்­டி­ருந்­தாலும் பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்து அமை­தி­யா­னதோர் நாடாக இந்த நாட்டை ஏற்­ப­டுத்­தி­யது ஜாதிக ஹெல உறு­ம­ய­வாகும்.


மேலும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்­கு­வ­தாக தெரி­வித்­தனர்.
ஆனால் செய்­ய­வில்லை.

அதே­போன்று 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக்ஷ நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்­கு­வ­தாக தெரி­வித்தார். ஆனால் அதி­கா­ரத்­துக்கு வந்­ததும் குடும்­பத்­தாரை பக்­கத்தில் வைத்­துக்­கொண்டார்.

தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­களை ஆரம்­பித்தார். அன்றும் அதி­கார போதை­யி­லேயே இருந்தார். இன்றும் அதி­கார போதை­யி­லேயே இருக்­கின்றார்.
அதே­போன்று தேர்­தலில் ஒரு வாக்­குக்­காக 43ஆயிரம் ரூபா செல­வ­ழித்தார். ஆனால் அவ­ருக்கும் இந்த நாட்டின் அதி­கா­ரத்தை மீண்டும் வழங்­கு­வ­தற்கு மக்கள் விரும்­ப­வில்லை.

தற்­போது இந்த அர­சாங்கம் தகுதி, திற­மையின் அடிப்­ப­டை­யி­லேயே பத­வி­களை வழங்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. புதி­ய­தொரு பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு நாட்டு மக்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டும். நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் புகையிலை நிறுவனங்களின் தாளத்துக்கு ஆட முற்பட்டன.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிகரட்டின் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைத்தார் என்றார்

மகிந்த ஒரு வாக்­குக்­காக 43ஆயிரம் ரூபா செல­வ­ழித்தார். இன்னும் 20 வரு­டங்கள் செல்லும் வரை அவரால் ஆட்சிக்கு வர முடியாது. மகிந்த ஒரு வாக்­குக்­காக 43ஆயிரம் ரூபா செல­வ­ழித்தார். இன்னும் 20 வரு­டங்கள் செல்லும் வரை அவரால் ஆட்சிக்கு வர முடியாது. Reviewed by Madawala News on 9/20/2016 09:39:00 AM Rating: 5