Free Space

கடலில் 49 கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று சடலத்தை போடவும்..


கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட மாணவர் ஒருவரின் சடலம் நேற்று மாணவர் விடுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில்  குறித்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கருவாத்தோட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பிபிலை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 27 வயதான அந்த வைத்திய பீட இருதியாண்டு மாணவனின் சடலம் நேற்று பிற்பகல் மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த மாணவன் பரீட்சையில் தோல்வியடைந்தமையால் ஏற்பட்ட மன உளைச்சலினாலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

வரும் நவம்பரில் குறித்த மாணவனின் மருத்துவ படிப்புக்கான இறுதி பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள முடியாத மன அழுத்தத்தில் இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆங்கில மொழியில் எழுதிய மூன்றுபக்க கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ள அதேவேளை தனது பூதவுடலை யாருக்கும் காட்டவேண்டாம் எனவும் கடலில் 49 கிலோ மீற்றர் தூரத்தில் கொண்டு போய் சடலத்தை போட்டுவிடுமாறும் குறித்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் 49 கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று சடலத்தை போடவும்.. கடலில் 49 கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று சடலத்தை போடவும்.. Reviewed by Madawala News on 9/12/2016 09:20:00 AM Rating: 5