கவலையில் 4 நாட்கள் தூங்கவில்லை.



இங்கிலாந்து 444 ரன்கள் குவித்தது ஒரு கெட்டகனவு. அதை நினைத்து நான்கு நாட்கள் தூங்கவில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ரியாஸ் வஹாப் கூறியுள்ளார்.

இங்கிலாந்து 444 ரன்கள் குவித்ததால் நான்கு நாட்கள் தூங்கவில்லை: பாக். வேகப்பந்து வீச்சாளர் சொல்கிறார்
சமீபத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போடடிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி 444 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ரியாஸ் வஹாப் 10 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 110 ரன்கள் வாரி வழங்கினார். இன்னும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தால் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிக் லெவிஸ் உடன் பகிர்ந்து கொண்டிருந்துருப்பார்.

தனது மோசமான பந்து வீச்சால் நான்கு நாட்களாக நான் தூக்கத்தை தொலைத்தேன் என்று ரியாஸ் வஹாப் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரியாஸ் வஹாப் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் மோசமாக பந்து வீசியது என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்ததால் என்னால் நான்கு ஐந்து நாட்கள் தூங்கமுடியவில்லை. இவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுத்ததற்காக நான் பயப்படவில்லை. ஆனால், இந்த போட்டி நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்க்க ஒருவேளை திருப்புமுனையாகக்கூட இருக்கலாம். இந்த போட்டி எனக்கும், அணி வீரர்களுக்கும் ஒரு கெட்ட கனவு’’ என்றார்.

இந்த போட்டிக்குப் பிறகு நடைபெற்ற டி20 போட்டியில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரியாஸ் வஹாப்பிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
கவலையில் 4 நாட்கள் தூங்கவில்லை. கவலையில் 4  நாட்கள் தூங்கவில்லை. Reviewed by Madawala News on 9/11/2016 09:25:00 PM Rating: 5