Oceas

எமது நாட்டு கடனை அடைக்க 4 நாடுகள் உதவி. உத்தியோக பூர்வமாகவும் அறிவிப்பு.



இலங்கையின் கடன் சுமையை குறைக்க நான்கு நாடுகள் பூரண உதவி வழங்க முன்வந்துள்ளதாக அந்தந்த நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டு தூதுவர்கள், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே இலங்கையின் கடன் சுமையை குறைக்க கை கொடுக்க முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 உலக சந்தையை உறுதிப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும்  1961 ஆம் ஆண்டு  உருவாக்க்கப்பட்ட அமைப்பின் முக்கிய நாடுகளாக குறிப்பிட்ட நான்கு நாடுகளுமே காணப்படுகின்றன.

தற்போது இலங்கையின் மொத்த கடன்  8500 பில்லியன் ரூபா. இதில் நூற்றுக்கு 42 வீதம் வெளிநாட்டு கடனாகும். இவற்றின் சுமையை குறைப்பதற்கும் செலுத்தும் வட்டியை குறைப்பதற்கும் நேற்று குறிப்பிட்ட நாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .
எமது நாட்டு கடனை அடைக்க 4 நாடுகள் உதவி. உத்தியோக பூர்வமாகவும் அறிவிப்பு. எமது நாட்டு கடனை அடைக்க 4 நாடுகள் உதவி. உத்தியோக பூர்வமாகவும் அறிவிப்பு. Reviewed by Madawala News on 9/28/2016 08:20:00 AM Rating: 5