Free Space

வடகொரியா அணு குண்டு சோதனை - 5.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

 வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா 5வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி இருப்பதாகவும், அதன் காரணமாக வடகொரியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் 5வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட போது அப்பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவ்வப்போது வடகொரிய இதுபோன்ற பயங்கர ஆணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜி20 மாநாடு நடைபெற்ற போது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகள் சோதனையை நடத்தியது. வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டி உள்ளது.

வடகொரியா அணு குண்டு சோதனை - 5.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வடகொரியா அணு குண்டு சோதனை - 5.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் Reviewed by Madawala News on 9/09/2016 10:04:00 PM Rating: 5