யாழில் 5 இராணுவத்தினர் சிறையிலடைப்பு.



யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 5 இராணுவத்தினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன், இன்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.

இன்று மன்றில் ஆஜராகத மேலும் 11 இராணுவத்தினரை பிடியாணை பிறப்பித்து நீதிவான் உத்தரவிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அச்செழு முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போனார்கள்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போதைய காலத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் மட்டும் இயங்கியது. இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழில் 5 இராணுவத்தினர் சிறையிலடைப்பு. யாழில் 5 இராணுவத்தினர் சிறையிலடைப்பு. Reviewed by Madawala News on 9/26/2016 09:13:00 PM Rating: 5