பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ! இதுவரை 6 பேர் பலி 150 படுகாயம்....


பாகிஸ்தானில் முல்தான் அருகே சரக்கு ஏற்றும் ரயில் மீது கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளாதில் 
6 பேர்  உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 150 பேரில், 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது  என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 
பாகிஸ்தானில் ஹஜ் பண்டிகையை முன்னிட்டு 3 நாள் அரசு விடுறை என்பதால், பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் விடுமுறை முடிந்து  நேற்று பணிக்கு திரும்பிக்கொண்டிருந்ததால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், கராச்சி நகருக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் முல்தான்  என்ற இடத்திற்கு அருகே இன்று காலை சென்று கொண்டிருந்த  போது, எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்க்குள்ளானது. இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.

இதனையடுத்து, தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 6  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ! இதுவரை 6 பேர் பலி 150 படுகாயம்.... பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ! இதுவரை 6 பேர் பலி 150 படுகாயம்.... Reviewed by Madawala News on 9/15/2016 11:24:00 AM Rating: 5