இலங்கை பெண்களை தாக்கும் புற்றுநோய். ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேர் வரை....



இலங்கையிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 40 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

மார்பகப் புற்றுநோய்குட்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேர் வரையில் அடையாளம் காணப்படுகின்றனர். வருடத்துக்கு இவர்களின் எண்ணிக்கை 2500 ஆக காணப்படுகின்றது.

புற்றுநோய் ஏற்பட்டுள்ள பெண்களில் 25 வீதமானனோர் மார்பகப் புற்றுநோய் நோயாளர்கள் எனவும், இவர்கள் ஆரம்பத்தில் தமது நோய்க்கு சிகிச்சை செய்யத் தவறியதனால், உக்கிர புற்றுநோயினால் அவதிப்படுவதாகவும் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். D C
இலங்கை பெண்களை தாக்கும் புற்றுநோய். ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேர் வரை.... இலங்கை பெண்களை தாக்கும் புற்றுநோய். ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேர் வரை.... Reviewed by Madawala News on 9/29/2016 09:18:00 AM Rating: 5